திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 5ஆவது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவராக 5ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலினை திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர் பாலு உள்ளிட்டார் கூட்டாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவராக அவர் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 5ஆவது ஆண்டு தொடங்குகிறது. முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கடந்தாண்டு சட்டபேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார்.
அதிமுகவை வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைப் பிடித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு மக்கள் நலதிட்டங்களை செய்து வருகிறார். கொரோனா தீவிரமாக இருந்த போது அதனை சிறப்பாக கட்டுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். உள்ளாட்சி தேர்தலும் திமுக பெரும்பான்மையான வெற்றி பெற்றது.
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 5ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் அண்ணா அறிவாலயம் செல்லும் ஸ்டாலின் சோமுச தொழிற்சங்க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். கட்சி தொண்டர்களையும் சந்திக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“