ஏடிஎம் சேவைக்கு கட்டண உயர்வு...இதுவா டிஜிட்டல் மயமாக்கம்? - ஸ்டாலின் கண்டனம்

ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கட்டண உயர்வுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கட்டண உயர்வுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ஸ்டாலின்

ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கூடுதல் கட்டணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, "அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.

அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.

Advertisment
Advertisements

ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்" என்றார்.

மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி, மாதம்தோறும் 5 முறை மட்டும் கட்டணமின்றி ஏடிஎம்களை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் பணம் எடுப்பது மட்டுமின்றி இருப்பு விவரங்களைத் தெரிந்து கொள்வது உள்ளிட்ட பிற ஏடிஎம் சேவைகளும் அடங்குகிறது. 

அதுமட்டுமின்றி ஏடிஎம்மை பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மே 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணத்தை 2 ரூபாய் உயர்த்தி ரூ.23 வசூலிக்க வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது. 

அதே நேரத்தில் தாங்கள் கணக்கு வைக்காத பிற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது பெருநகரங்களில் மூன்று முறையும், பிற பகுதிகளில் 5 முறையும் கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இதன் பிறகு ஏடிஎம்மை பயன்படுத்தினால் மே 1 ஆம் தேதி முதல் ஒருமுறைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Atm Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: