/tamil-ie/media/media_files/uploads/2021/08/stalin7592.jpg)
Stalin consoles EPS OPS in Madhusudhanan Funeral Tamil News
Stalin consoles EPS OPS in Madhusudhanan Funeral Tamil News : உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மறைந்த மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவருடைய உடல் இன்று அதிகாலை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் மரியாதை செலுத்திய பிறகு, பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பிறகு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவருடைய உறவினர்கள் மற்றும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர் சேகர் பாபு கண்கலங்கினார்.
இதை தொடர்ந்து தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மதுசூதனனின் உடலுக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மதுசூதனனின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதுசூதனனின் உடல் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.