Chennai News Updates: சென்னை, மாதவரத்தில் செயல்பட்டு வரும் கார் உதிரி பாகங்கள் கிடங்கில் தீ விபத்து

Tamil Nadu News Update Today 6 July 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update Today 6 July 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai fire accident

Today Latest Live News Update in Tamil 6 July 2025:பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jul 06, 2025 20:40 IST

    எலான் மஸ்க் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொறுப்பு

    தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கிய நிலையில், அதன் பொருளாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக வைபவ் தனேஜா செயல்பட்டதாக கூறப்படுகிறது. 



  • Jul 06, 2025 20:07 IST

    மாதவரத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் கிடங்கில் தீ விபத்து

    சென்னை, மாதவரத்தில் செயல்பட்டு வரும் கார் உதிரி பாகங்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இத்தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.



  • Advertisment
  • Jul 06, 2025 20:02 IST

    தண்டிக்கப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையில் காவல்துறை செயல்படுகிறது - பெ. சண்முகம்

    காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். அதன்படி, "காவல்துறையின் இதயம் கெட்டு விட்டது. காவல்துறையினர், உத்தரவுகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். என்ன தவறு செய்தாலும் தண்டிக்கப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையில் காவல்துறை செயல்படுகிறது. காவல்துறையின் சித்திரவதைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Jul 06, 2025 19:39 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சர்ச்சையான ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் - போலீசார் தீவிர விசாரணை

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த நபரை பழிவாங்குவேன் என்று இளைஞர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் ரீல்ஸ் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்த ரீல்ஸ் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Advertisment
    Advertisements
  • Jul 06, 2025 18:12 IST

    தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் தேர்வு

    தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு ஷிப் அறிவிப்பு. இதற்காக நடந்த தேர்தலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த  அருண் பாஸ்கர்,  தினேஷ் ஆகியோர் முதன்மை துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



  • Jul 06, 2025 16:54 IST

    ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழ்நாடு அரசு

    குறிப்பிட்ட பகுதியில் இருந்து இவ்வளவு நேரத்தில் சென்றுவிடலாம் என்று ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது, எவ்வளவு தூரம் என்பதை குறிப்பிடலாம். 100+ வசதிகள் என்று பொதுப்படையாக குறிப்பிடாமல், வசதிகள் குறித்து முழுமையாக தெரிவிக்க வேண்டும். திட்டத்தின் பதிவெண் க்யூஆர் கோட் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது,



  • Jul 06, 2025 15:48 IST

    பாமக நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கப்படவில்லை

    ஜூலை 8ம் தேதி நடைபெறவுள்ள பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு அழைப்பு உள்ளது. செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.



  • Jul 06, 2025 15:47 IST

    ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுரை

    தமிழ்நாடு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட உணவகத்தில் பேருந்தை நிறுத்தாமல், அவர்களுக்கு விருப்பப்பட்ட உணவகத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுரை வழங்கினார்.



  • Jul 06, 2025 15:45 IST

    உலகின் 7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி சாதனை - தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு பாராட்டு

    உலகின் 7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு அமெரிக்காவின் தமிழ்ச் சங்க மாநாட்டில் பாராட்டு தெரிவித்துள்ளது. முதலில் எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை புரிந்தவுடன், அவரது தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டி அரசு சார்பில் கல்பனா சாவ்லா விருது வழங்கி, நிதி உதவியும் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கி ஊக்குவித்தார்.



  • Jul 06, 2025 15:03 IST

    "அதிமுக - பாஜக பொருந்தா கூட்டணி" - திருமாவளவன்

    அதிமுக தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதையே அதிமுக முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா பேசியது வெளிக்காட்டுகிறது. அதிமுக - பாஜக பொருந்தா கூட்டணி; அவர்கள் மனம் ஒத்து களப்பணி ஆற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று திருமாவளவன் கூறியுள்ளார்.



  • Jul 06, 2025 14:17 IST

    நீதிபதிக்கு கடிதம்

    உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பணி ஓய்வுக்கு பிறகும் அரசு பங்களாவை காலி செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. பணியில் உள்ள 4 நீதிபதிகள் தங்குவதற்கு இடமில்லை என்பதால் உடனடியாக காலி செய்யக்கோரி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.



  • Jul 06, 2025 13:45 IST

    திமுக, அதிமுகவிடம் பாஜக கற்க வேண்டும் - வானதி சீனிவாசன்

    பூத் கமிட்டி வேலையை திமுக, அதிமுகவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். வாக்கு சேகரிப்பதில் திமுக, அதிமுக எப்போதும் பூத் மாஸ்டர்களாக உள்ளனர். அவர்களை தூக்கி சாப்பிட நாமும் பூத் மாஸ்டர்களாக இருக்க் வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.



  • Jul 06, 2025 13:25 IST

    பா.ம.க லெட்டர் பேடில் அன்புமணி பெயர் நீக்கம் 

    பா.ம.க லெட்டர் பேடில் இருந்து அன்புமணி ராமதாஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. பா.ம.க-வின் நிர்வாக குழு உறுப்பினர் பட்டியலிலும் பெயர் இடம் பெறவில்லை. லெட்டர் பேடில் இருந்து அன்புமணி பெயர் நீக்கப்பட்ட‌து பா.ம.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • Jul 06, 2025 12:39 IST

    அமெரிக்காவில் தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக காவலர்: சேலத்தைச் சேர்ந்த தலைமை காவலர் சாதனை

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமை காவலர் தேவரராஜ், கோலூன்றி தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    அமெரிக்காவின் அலபாமாவில் 'தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டி' நடைபெற்று வருகிறது. இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்ற சேலத்தைச் சேர்ந்த தலைமை காவலர் தேவரராஜ், தனது சிறப்பான பங்களிப்பின் மூலம் கோலூன்றி தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.



  • Jul 06, 2025 12:25 IST

    பா.ஜ.க காலூன்ற முடியாது அன்வர் ராஜா கருத்துக்கு அண்ணாமலை பதிலளிக்க மறுப்பு

    தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்ற அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா கருத்துக்கு பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

    அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் தனி மனிதனாக வந்திருக்கிறேன்; மற்றவரின் கருத்துக்கு பதில் கூற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 06, 2025 12:09 IST

    பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7 முதல் தொடக்கம்: சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு முதல் வாய்ப்பு

    தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 7, 2025) இணைய வழியில் தொடங்குகிறது. முதல் கட்டமாக, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    பொதுப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் இணையதளம் வாயிலாகக் கலந்தாய்வில் பங்கேற்று, விரும்பிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யலாம். இந்தக் கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.



  • Jul 06, 2025 11:21 IST

    அங்கன்வாடி மையங்களை மூட தமிழக அரசு திட்டம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்

    தமிழக அரசு 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மூட திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஏழை குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பகால வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும், அங்கன்வாடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், "அங்கன்வாடிகள் மூடுவது ஏழை குழந்தைகளின் ஊட்டச்சத்து, ஆரம்ப கால வளர்ச்சியைப் பாதிக்கும்; அங்கன்வாடி ஊழியர் பற்றாக்குறையை சரி செய்யாமல் அவர்களை மூலை அரசு அநியாயமாகிவது" என்றும் அவர் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



  • Jul 06, 2025 10:53 IST

    ‘பா.ஜ.க-வின் திட்டம் ஒன்றும் பலிக்காது’ - அன்வர் ராஜா

    அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, “என்.டி.ஏ கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பா.ஜ.க-வின் திட்டம் ஒன்றும் பலிக்காது; எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர். பா.ஜ.க-வுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடுதான்” என்று கூறியுள்ளார்.



  • Jul 06, 2025 10:50 IST

    தமிழ்நாட்டில் இந்த 2 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய 2 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் 
    மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jul 06, 2025 10:19 IST

    மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்

    மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்பட உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு நடைபெறும் பணியில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.



  • Jul 06, 2025 09:34 IST

    சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டம்

    சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி அமைச்சர்கள் பெரிய கருப்பன், சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.



  • Jul 06, 2025 09:10 IST

    பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவிப்பு

    பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். புதிதாக 21 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைப்பு. ஜி.மே. மணி, அருள், ஏ.கே.மூர்த்தி ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.



  • Jul 06, 2025 08:45 IST

    டெல்லி முடிவு செய்யும்

    அதிமுக - பாஜக கூட்டணியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை டெல்லிதான் முடிவுசெய்யும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவே சொல்லிவிட்ட பிறகு யார் பேசினாலும் அது சரியல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளார். 



  • Jul 06, 2025 08:43 IST

    பயணம் திடீர் ரத்து?

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மீண்டும் தமிழகம் வரவிருந்த பயணம் தனிப்பட்ட காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Jul 06, 2025 08:23 IST

    பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

    அர்ஜெண்டினா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு ரியோ டி ஜெனியோ விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



  • Jul 06, 2025 08:12 IST

    இனியாவது திருந்த வேண்டும்

    இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என தமிழ்நாட்டில் ஒப்பித்துக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும். அப்பாவிகளின் அறிவுக் கண்களை மராட்டியத்தின் எழுச்சி திறக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Jul 06, 2025 08:07 IST

    காய்கறிகள் விலை நிலவரம்

    மொத்த விற்பனையில் கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ஒரேநாளில் ரூ.15 குறைந்து, ரூ.35க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கடைகளில் இன்று ரூ.40க்கு தக்காளி விற்பனையாகிறது.



  • Jul 06, 2025 07:37 IST

    பொறியியல் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்!

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடங்குகிறது. ஏஐ, டிஎஸ், சிஎஸ், இசிஇ உள்ளிட்ட படிப்புகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு நாளையும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 14 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 



  • Jul 06, 2025 07:35 IST

    ஆதார் பெயர் நீக்கம் - புதிய வசதி

    இறந்தவர்களின் பெயரை ஆதாரில் இருந்து நீக்க குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம். மோசடிகளை தடுக்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழை முதன்மை ஆதாரமாகக் கொண்டு குடும்பத்தினரே பெயர் நீக்க முடியும். வாரிசு சான்று, சொத்துப் பதிவு ஆகியற்றுக்கு ஆதார் நீக்கச் சான்று கட்டாயமாக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 06, 2025 07:32 IST

    மேட்டூர் அணை நிலவரம்

    மேட்டூர் அணைக்கு இன்று அதிகாலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 40,500 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் மொத்தமாக 40,500 கன அடியாகவும் உள்ளது.



  • Jul 06, 2025 07:32 IST

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tamilnadu News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: