scorecardresearch

ஸ்டாலின் தாத்தா பணியாற்றிய கோயில் மரகத லிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு: சேகர்பாபு உறுதி

முதலமைச்சர் பணியாற்றிய கோவிலில் இருந்து மரகத லிங்கத்தை மக்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் சேர்கர் பாபு தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

முதலமைச்சர் பணியாற்றிய கோவிலில் இருந்து மரகத லிங்கத்தை மக்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் சேர்கர் பாபு தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில், அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், முதலமைச்சர் தாத்தா பணியாற்றிய கோவிலில் இருந்த, பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கம் காணாமல் போய் பின்பு மீட்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த கோவிலை பொது மக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு இதற்கு பதிலளித்தார். முதலமைச்சர் மூதாதையர்கள் பணியாற்றிய கோவிலில் உள்ள மரகத லிங்கம் தற்போது வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் உரிய ஆவணங்களை ஒப்படைத்த பின்னர், கோவிலில் வைக்கப்பட்டு மக்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Stalin father worked temple and maragatha lingam will be soon open for people worship