'மோடியின் குடும்பம் இ.டி, ஐ.டி, சி.பி.ஐ மட்டுமே': இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் தாக்கு

மோடியின் குடும்பம் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ மட்டுமே என இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை சுட்டிக் காட்டி மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மோடியின் குடும்பம் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ மட்டுமே என இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை சுட்டிக் காட்டி மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Modi stalin

மத்திய புலனாய்வு அமைப்புகள்தான் மோடியின் குடும்பம் என மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

 Mk Stalin | Narendra Modi | Lok Sabha Election | மோடியின் குடும்பம் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ மட்டுமே என இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை சுட்டிக் காட்டி மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது 
@IndianExpress நாளேடு!
பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

Advertisment

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?
“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mk Stalin Narendra Modi Lok Sabha Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: