அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் அமைச்சரின் கோரிக்கை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும் கோவை மக்களவைத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளருமான டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ தளத்தில், கடந்த சில நாள்களாக கோவை முழுவதும் பிரச்சாரம் செய்தபோது விளையாட்டின் மீது ஆழ்ந்த ஆர்வமுள்ள இளைஞர்களை சந்தித்ததாகவும் குறிப்பாக தடகளம் துப்பாக்கி சுடுதல் கார் பந்தயம் கால்பந்து ஸ்கேட்டிங் குதிரை ஏற்றம் போன்ற பல்வேறு விளையாட்டுகள் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் கோவை இளைஞர்களின் ஆர்வம் ஈடு இணையற்றது என குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் அணிகளின் மூன்று அணிகளின் தாயகமாகவும் வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கோவை மற்றும் மொத்த தமிழ்நாட்டுக்கும் விளையாட்டின் உள்கட்ட அமைப்பில் ஒரு பெரிய ஊக்கம் தேவை எனவும் அதைத்தான் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஒரு வருடமாக செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அற்புதமான திறமைகள் மற்றும் தமிழ்நாட்டில் மற்றொரு உலக தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம், அதன் உண்மையான தேவையை கருத்தில் கொண்டு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் நிறுவ வேண்டும் எனவும் இந்த மைதானம் உலகிலேயே மிகவும் நீடித்து நிலைத்து நிர்மாணிக்கப்பட்ட அதிநவீன ஸ்டேடியமாக இருப்பதால் உலக அளவில் கிரிக்கெட் தரத்தை மறுவறை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இந்த மைதானம் உள்ளூர் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அதில் பசுமை கண்டுபிடிப்பு நீர் பாதுகாப்பு காணலை உணர்வு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகவும் செயல்படும் எனவும் இந்த மைல் கல்லை ஒரு புதிய உலகளாவிய மைதானத்தை அமைத்து வளமான விளையாட்டு துறையை வளர்த்தெடுக்க முதல்வரை கேட்டுக் கொள்வதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுக்கு பதிவுக்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்க விரும்புவதாகவும் கோவையில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் தீவிர பங்கேற்புடன் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்போம் எனவும் இந்த மைதானம் சென்னையின் சின்னமாக இருக்கக்கூடிய சேப்பாக்கம் மைதானத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வேஸ் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் திமுக அரசும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் திறமைகளை வளர்ப்பதற்கும் விளையாட்டு உட்காட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளதாக பதில் அளித்துள்ளார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.