இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், இலங்கை கடலோர காவல் படையினரால் கைத செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி மு.க. ஸ்டாலின், ஜெய்சங்கருக்க கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறிப்பதாக உள்ளது.
மீனவ மக்களின் கலாசாரம், பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய போக்கு பதற்றமான சூழலை உருவாக்கும். ஆகவே அரசு இதில் உடனே கவனம் செலுத்துவது அவசியம். மேலும், இந்த விவகாரம் கவலை அளிக்கிறது. மீனவர்களின் கைது தொடர் கதையாகி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு- நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.
மீனவர்களிடம் இருந்த இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“