சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
அப்போது மு.க. ஸ்டாலின், “வீட்டு வசதி இல்லாதோருக்கு வீடுகள் கட்டித் தருவது அரசின் தலையாய கடமையாகும். இதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்கப் போகிறது. ஏரி, குளம், குட்டை, கண்மாய்களை எல்லாம் தூர்வாரி குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போதே இதனை தொடங்க வேண்டும். இந்தப் பணிகளிலும் மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“