Chennai News LIVE Updates: 'மோடி ஆதரித்த டிரம்ப் விதித்த வரியால் டாலர் சிட்டி திருப்பூர் தவிக்கிறது’ - ஸ்டாலின்

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin Modi

Tamilnadu Live news Udpates:பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Sep 02, 2025 20:53 IST

    மோடி ஆதரித்த டிரம்ப் விதித்த வரியால் டாலர் சிட்டி திருப்பூர் தவிக்கிறது - ஸ்டாலின்

    அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் 'டாலர் சிட்டி'யான திருப்பூர் தவித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்புக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மோடி ஆதரித்த டிரம்ப், விதித்துள்ள வரியால் திருப்பூர் தொழில் நகரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அமெரிக்க வரி விதிப்புக்கு எதிரான நமது ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.

     



  • Sep 02, 2025 20:06 IST

    ‘தமிழக ஏற்றுமதியாளர்களை பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?” மோடிக்கு ஸ்டாலின் கேள்வி 

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Advertisment
  • Sep 02, 2025 20:02 IST

    நடிகர் ரவி மோகன் வழக்கு: நீதிபதியை அணுக ஐகோர்ட் உத்தரவு

    நடிகர் ரவி மோகனுக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அனைத்து நிவாரணங்களுக்கும் நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.சத்தியநாராயணனை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் ரவி மோகன் தொடர்பாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து நிவாரணங்களுக்கும் நடுவராக ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணனை நியமித்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரரான படத் தயாரிப்பு நிறுவனம், இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நிவாரணங்களுக்காக நடுவர் நியமிக்கப்பட்ட நீதிபதியை அணுகுமாறு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.



  • Sep 02, 2025 19:19 IST

    2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம்: சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

    சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், இந்த பணி நியமனங்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார். 



  • Advertisment
    Advertisements
  • Sep 02, 2025 19:10 IST

    வட மாநில தொழிலாளி உயிரிழப்பு; போராடிய தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்

    திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி பகுதியில், வட மாநில தொழிலாளரொருவர் நேற்றிரவு உயிரிழந்த நிலையில் அவரது இறப்புக்கு நீதி கேட்டும் இழப்பீடு கேட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் இன்று போராடி வருகின்றனர். அவர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறை அப்புறப்படுத்திய நிலையில், கற்களை வீசி அவர்கள் தாக்கத்தொடங்கியதால் பதற்றம் நிலவுகிறது. துணை ஆணையர் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் இதில் காயம். ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்த உ.பி.யை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர், நேற்றிரவு மாடியில் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



  • Sep 02, 2025 18:46 IST

    தமிழக மீனவர்களுக்கு அபராதம்: வைகோ கண்டனம்

    எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைப்பதும், கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை அரசின் அடாவடித்தனத்தை தொடர்ந்து இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது மீனவ சமூகத்தை கொந்தளிக்க செய்திருக்கிறது. இலங்கை அரசின் இத்தகைய மீனவர்கள் விரோத செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்

     



  • Sep 02, 2025 18:21 IST

    2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஐகோர்ட் அனுமதி

     2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு சேரவேண்டிய 2%ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கக்கூடாது. நேரடி தேர்வு நடத்தி 2500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நியமனம் செய்யப்படவில்லை



  • Sep 02, 2025 17:43 IST

    364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: ஸ்டாலின்

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். காலை உணவு, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்கள் வாக்குறுதிகளில் குறிப்பிடப்படாதவை. அ.தி.மு.க ஆட்சியின் 10 ஆண்டு நிதி நிர்வாக சீர்கேடு, உள்ளிட்ட தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



  • Sep 02, 2025 17:41 IST

    முகக் கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

    மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தீவிரப்படுத்தியது தமிழக சுகாதாரத் துறை. மேலும் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது |நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்; காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும் என சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.



  • Sep 02, 2025 17:39 IST

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து தூய்மைப் பணியாளர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து கடந்த மாதம் 13-ம் தேதி வெளியேற்றினர். இந்த நிலையில், போராட்டம் நடத்த தூய்மைப் பணியாளர்கள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 02, 2025 17:27 IST

    தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி பூசல் இல்லை : நிர்மலா சீதாராமன்

    தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி பூசல் என்பது இல்லவே இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறதா என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் இவ்வாறு பதில் அளித்தார்.



  • Sep 02, 2025 17:18 IST

    தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

    தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு வருவாய் புலனாய்வுத் துறை ரூ.102 கோடி அபராதம் விதித்தது. துபாயில் இருந்து ரன்யா ராவ் 127 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் வருவாய் புலனாய்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவுக்கு டி.ஆர்.ஐ. சிறையிலேயே நோட்டீஸ் வழங்கியது. அபராதத்தை செலுத்தாவிட்டால் நடிகை ரன்யா ராவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என வருவாய் புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரன்யா ராவின் கூட்டாளியாக செயல்பட்டு 72 கிலோ தங்கம் கடத்திய டி.கே.ராஜுவுக்கு ரூ.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



  • Sep 02, 2025 17:17 IST

    சென்னையில் ரூ.65 கோடி மதிப்பிலான டிரக் பறிமுதல்

    ஆப்பிரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.65 கோடி மதிப்புடைய 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் மறைத்து எடுத்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.



  • Sep 02, 2025 17:07 IST

    சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்: ஸ்டாலின் பதிவு

    சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்!"இவ்வாறு தெரிவித்துள்ளார்.



  • Sep 02, 2025 17:05 IST

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1,400ஆக உயர்வு

    ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 1,400 ஐ தாண்டியுள்ளது. 3,214க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருப்பதாகவும், 5,400 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



  • Sep 02, 2025 16:49 IST

    புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்குதலில் 6 போலீசார் காயம்

    திருவள்ளூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் போராட்டத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்துள்ளதாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்



  • Sep 02, 2025 16:18 IST

    தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன - அமைச்சர் தங்கம் தென்னரசு

    தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.



  • Sep 02, 2025 16:15 IST

    டெட் தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்கள் பணிகள் பாதுகாக்கப்பட்ட வேண்டும் - முத்தரசன் அறிக்கை

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை. 

    ஆசிரியர் தகுதித் தேர்வு- உச்ச நீதிமன்ற தீர்ப்பு - பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் 

    தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்கி, மேல் நிலைப்பள்ளிகள் வரை 2 இலட்சத்து 29 பேர் ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இது தவிர அரசு உதவி பெறும் பள்ளிகளில் 76 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண், பெண் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

    கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாக இருந்தன. 1867 அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் ஆசிரியர்கள் பங்களிப்பு முக்கியமானது. 

    இப்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு சுமார் 1.50 லட்சம் ஆசிரியர்களை பாதிக்கும் என்ற கவலை தொற்றிக் கொண்டுள்ளது. இதில் 37 ஆயிரத்து 387 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நலனும் இணைந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்வது அவசியமாகும். தேர்ச்சி பெற்றால் தான் பணியில் தொடர முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது. 

    ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக கிடைத்த பிறகு, அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், “ஆசிரியர்களை அரசு கைவிடாது” என உறுதியளித்திருப்பது ஆறுதல் அளிக்கும் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகள் பணித் தொடர்ச்சி கொண்ட ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பணி ஓய்வு பெறுவதற்கு ஐந்தாண்டுகள் இருப்பவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது போல், டெட் தேர்வில் பங்கேற்காத ஆசிரியர்கள் அனைவரது பணியும் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சி.பி.ஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • Sep 02, 2025 16:11 IST

    வட மாநில தொழிலாளி மரணம் - ரூ.5 லட்சம் இழப்பீடு

    திருவள்ளூர், காட்டுப்பள்ளியில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் அமரேஷ் பிரசாத் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் உடலை சொந்த ஊர் கொண்டு செல்லும் செலவை ஏற்றுக்கொள்ளவதாகவும் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இழப்பீடு கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது



  • Sep 02, 2025 15:52 IST

    மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

    அடுத்தாண்டு கோடைக்காலத்தில் ஏற்படும் மின் தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
        
    2026 பிப் 1 முதல் மே 15 வரை 7040 மெகா வாட் மின்சாரம் வாங்க குறுகிய கால டெண்டர் கோருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது



  • Sep 02, 2025 14:48 IST

    கவிதா சஸ்பெண்ட்.

    பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா சஸ்பெண்ட். பிஆர்.எஸ். கட்சியை அழிக்கும் வகையில் சிலர் செயல்படுவதாக அவரது அண்ணன் மீது மறைமுகமாக குற்றம் சாட்டி இருந்தார் கவிதா.



  • Sep 02, 2025 14:44 IST

    உதவி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையின் போது இணை ஆணையர் நிஷா மெட்டலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது



  • Sep 02, 2025 14:39 IST

    முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்ப்பு

    சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்க்கப்பட்டார். எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி ஐகோர்ட்டில் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆதாரங்கள் சேகரித்துள்ளதால் மீண்டும் வழக்கு பதிய அனுமதி அளிக்கப்பட்டது.



  • Sep 02, 2025 13:29 IST

    "ஜிஎஸ்டி யில் சீர்த்திருத்தம் தொடர்பாக நாளை ஆலோசனை" - நிர்மலா சீதாராமன்

    "ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடர்பாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஜிஎஸ்டி யில் வெளிப்படைத்தன்மை, கூடுதல் சலுகைகளுடன் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்படும்" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 



  • Sep 02, 2025 13:26 IST

    கிராமப்புற மக்கள் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்களிப்பு - குடியரசுத் தலைவர் முர்மு

    கிராமப்புற மக்கள் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்களிப்பு வழங்குகின்றன; தொழில் துறைக்கு வங்கிகள் கடன் வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகுகிறது என்று சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியுள்ளார். 



  • Sep 02, 2025 12:54 IST

    தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை

    தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ராமதாஸ் தீவிர ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆக.17ல் நடந்த ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைத்தனர்.



  • Sep 02, 2025 12:49 IST

    வடமாநில தொழிலாளர்கள் கல்வீச்சு - 10 போலீசார் காயம்

    மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி நடந்த போராட்டத்தில் கல்வீச்சு. வட மாநில தொழிலாளர்களின் கல்வீச்சில் 10க்கும் மேற்பட்ட போலீசார், 4 செய்தியாளர்களுக்கு காயம். வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். 



  • Sep 02, 2025 12:46 IST

    தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் நிறைவேற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

    “திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன; மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன, 64 திட்டங்கள் நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ள முடியாதவையாக உள்ளது என்று சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார். 



  • Sep 02, 2025 12:45 IST

    சந்தன மரம் கடத்திய போது உங்கள் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படவில்லையா? : ஐகோர்ட்

    மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்க புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி ரவுடி வெங்கடேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், சந்தன மரம் கடத்திய போது உங்கள் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படவில்லையா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் ரவுடி வெங்கடேசனின் கோரிக்கைக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Sep 02, 2025 12:44 IST

    சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு

    சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120ஆவது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடக்கும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணை முதல்வர் உதயநிதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.



  • Sep 02, 2025 12:19 IST

    ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு; 52.07 மில்லியன் டாலர் ஏற்றுமதி உயர்வு - அமைச்சர்கள் தங்கம் தென்னரசு பேட்டி

    அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் மற்றும் கோவி. செழியன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்பு முறையாக இல்லாத நிலையில் கூட தமிழ்நாடு அரசு சிறப்பாக அதனை எதிர்கொண்டுள்ளது. நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரட்டை இலக்க அளவில் வளர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையும் குறைக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையும் 3% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

    பல்வேறு தேர்வாணயங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 52.07 மில்லியன் டாலர் அளவுக்கு நம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.



  • Sep 02, 2025 12:08 IST

    ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் 

    மசோதாவுக்கு ஒப்புதல் காலக்கெடு விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி பி.ஆர். கவால் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணையை தொடங்கியது

    அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் அபிஷேக் சிங்க்வி, "ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது. அதேபோல, மாறும் சூழல், கொள்கைகள் காரணமாக அதனை மீண்டும் நிறைவேற்றாமல் கைவிடும் அதிகாரமும் சட்டப்பேரவைக்கு உண்டு. ஆட்சி மாற்றம் அல்லது கொள்கை மாற்றம் என்று மசோதாவை ஆளுநர் நிறுத்திவைக்க அல்லது கைவிட அதிகாரம் இல்லை. 

    ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது. ஆளுநர் சூப்பர் முதலமைச்சரான நினைத்து செயல்பட முடியாது. ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்தாலே அது செயலிழந்ததாகக் கூற முடியாது. அந்த அதிகாரத்தை ஆளுநருக்கு அரசியல் சாசனம் வழங்கவில்லை. அதே நேரத்தில், சட்டப்பேரவை கூடாத நேரத்தில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது." என்று கூறினார். 



  • Sep 02, 2025 11:54 IST

    மழை நீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழக்கவில்லை - சென்னை மாநகராட்சி விளக்கம்

    சென்னை அரும்பாக்கத்தில் வண்டல் வடிகால் தொட்டியில் விழுந்து பெண் உயிரிழந்ததாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. 45 வயது பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. மழை நீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.



  • Sep 02, 2025 11:42 IST

    கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் பதவி நீக்கம் - அரசின் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் 

    சென்னை மாநகராட்சியில் 2 கவுன்சிலர்கள், தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்த அரசின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர். கவுன்சிலர்கள் அளித்த பதிலை, எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு நிராகரித்துள்ளது. அவர்களின் பதில்களை பரிசீலித்து 4 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும் நீதிபதி மாலா உத்தரவிட்டுள்ளார். 



  • Sep 02, 2025 11:42 IST

    கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு - இரா.முத்தரசன் வேண்டுகோள்

    "“கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என கூறியுள்ளார் இலங்கை அதிபர். அனுர குமாராவின் இந்தப் பேச்சு இந்தியா - இலங்கை நல்லுறவுக்கு வலு சேர்க்காது. மாறாக இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது.

    “இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடித்து சிக்கினால், அவர்களை எளிதாக விட மாட்டோம். பிடிபடும் படகுகளை திருப்பித் தர மாட்டோம். அது இலங்கைக்கே சொந்தமாகும்“ என்று கூறியிருப்பது அதிகார  ஆணவத்தின் உச்சமாகும். இலங்கை அதிபரின் கச்சத்தீவுப் பயணம், கச்சத்தீவு மற்றும், தமிழ்நாடு  மீனவர்கள் குறித்த அவரது  அணுகுமுறை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை சேதாரம் இல்லாமல் திருப்பி வழங்கவும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களின் வாழ்வாதரம் பாதுகாக்கப்படவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமை நிலை நாட்டப்படவும்  ஒன்றிய அரசு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 



  • Sep 02, 2025 11:28 IST

    வடமாநில தொழிலாளர்கள் கல்வீச்சு - போலீசார் தடியடி

    திருவள்ளூர், காட்டுப்பள்ளியில் உ.பியை சேர்ந்த தொழிலாளர் அமரேஷ் பிரசாத் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, இழப்பீடு கோரி 1,000-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீசார் மீது வட மாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்த போலீசார், 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 



  • Sep 02, 2025 10:52 IST

    பவன் கல்யாண் பிறந்த நாள் - பிரதமர் வாழ்த்து

    "ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். எண்ணற்ற மக்களின் இதயங்களிலும் பவன் கல்யாண் ஒரு முத்திரையைப் பதித்துள்ளார்" என்று பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



  • Sep 02, 2025 10:51 IST

    '5-ம் தேதி மனம் திறந்து பேசுவேன்' - செங்கோட்டையன் 

    "செப்.5ம் தேதி அனைத்து விவரங்களும் முழுமையாக தெரிவிக்கப்படும் மனம் திறந்து பேசுவேன்" என்று கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 



  • Sep 02, 2025 10:30 IST

    சென்னையில் மழைநிர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு 

    சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை நடைப்பயிற்சி சென்ற பெண் பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார். 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 



  • Sep 02, 2025 10:30 IST

    சூடானில் கடும் நிலச்சரிவு - 1000-த்திற்கும் மேற்பட்டோர் பலி 

    சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், மக்கள் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர்.



  • Sep 02, 2025 10:15 IST

    உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    "வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவானது. 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஒடிசாவை நோக்கி நகர வாய்ப்பு. தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு"  என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Sep 02, 2025 09:45 IST

    குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விஜயகாந்த் விண்ணப்பம்

    தேமுதிக எம்.எல்.ஏ விஜயகாந்த் மறைவை குறிப்பிட்டு அவர் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடும்ப பென்ஷன் கோரி சட்டப்பேரவை செயலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தற்போது முன்னாள் எம்.எல்.ஏவின் குடும்பங்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.15, 000 வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.



  • Sep 02, 2025 09:41 IST

    கனமழை - குருகிராமில் போக்குவரத்து நெரிசல்

    குருகிராமில் கனமழையால் 20கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது.  போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் அணிவகுத்து நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தனர்.  



  • Sep 02, 2025 09:26 IST

    தேர்தல் பணியை தொடங்கிய அமைச்சர் பி.டி.ஆர்.

    மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறார். நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தொகுதியில்தான் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.



  • Sep 02, 2025 09:21 IST

    பஞ்சாப் வெள்ளத்தால் எனது மனம் உடைந்தது

    பஞ்சாப் வெள்ளத்தால் பேரழிவிற்கு உள்ளானதை கண்டு எனது மனம் உடைந்தது. பஞ்சாப் எப்போதும் எந்த துன்பத்தையும் வலிமையாக எதிர்கொள்ளும், விரைவில் மீள்வோம் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.



  • Sep 02, 2025 09:20 IST

    காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

    சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு குடியிருப்புப் பகுதியில் கீழே விழுந்து உயிரிழந்த அமர்பிரசாத் என்ற தொழிலாளியின் உடலை காட்ட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 2000 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Sep 02, 2025 08:47 IST

    ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை

    ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் டேவிட் 2 நாள் பயணமாக பெங்களூரு வருகை, இஸ்ரோ மையத்தை நேரில் பார்வையிடுகிறார். டெல்லியில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜோஹன் டேவிட் ஆலோசனை நடத்துகிறார்.



  • Sep 02, 2025 08:46 IST

    நடிகர் சவுபின் ஷாகிர் வெளிநாடு செல்ல தடை

    துபாயில் நடைபெறும் விழாவில் பங்கேற்க சவுபின் ஷாகிர் திட்டமிட்டிருந்த நிலையில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட பண மோசடி வழக்கில் வெளிநாடு செல்ல தடை, படம் தொடர்பான பண மோசடி வழக்கில் எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Sep 02, 2025 08:29 IST

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 1,100 பேர் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1100 ஆக அதிகரித்துள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து சேதமடைந்தன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அச்சமடைந்துள்ளனர்.  



  • Sep 02, 2025 07:59 IST

    கச்சத்தீவை விட்டுத்தர மாட்டேன்” -இலங்கை அதிபர் திட்டவட்டம்

    கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் அனுரகுமார திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: