Chennai News Updates: உண்ணாவிரதத்தை கைவிடுவது குறித்து தேசியத் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு - சசிகாந்த் செந்தில்

Tamil Nadu Latest News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sasikanth senthil hospital

Latest News Updates:பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சீனாவில் மோடி: சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். உச்சி மாநாட்டின் முழுமையான அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக, மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்தனர். புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று, நாங்கள் 3 பேரும் கருத்துகளை பரிமாறி கொண்டோம் என்று மோடி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

உச்சிமாநாட்டின் முதல் நாளில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் குழு புகைப்படத்திற்காக எழுந்து நின்றனர். பிரதமர் முன் வரிசையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடமிருந்து மூன்று இடங்கள் தள்ளியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடமிருந்து இரண்டு இடங்கள் தள்ளியும் நின்றார். பிரதமர் மோடிக்கு எட்டு இடங்கள் தள்ளி குரூப் போட்டோ எடுக்க பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் முன் வரிசையில் இருந்தார்.

  • Sep 01, 2025 22:10 IST

    உண்ணாவிரதத்தை கைவிடுவது குறித்து தேசியத் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு - சசிகாந்த் செந்தில் 

    காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில் பேட்டி: “உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னிடம் அறிவுறுத்தியுள்ளனர். உண்ணாவிரதத்தைக் கைவிடுவது குறித்து தேசியத் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன்” என்று கூறினார்.



  • Sep 01, 2025 21:22 IST

    ‘தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி; தி.மு.க ஆட்சியை அகற்றும் நோக்கில் நடைபயணம்’ - அன்புமணி

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. இளைஞர்கள் போதையின் பாதையில் செல்லும் அவல நிலை உள்ளது. தமிழகத்தில் 42 ஆயிரம் ஏரிகளில் 20 ஆயிரம் ஏரிகள் மாயமாகி உள்ளதூ. திரும்பும் திசையெங்கும் டாஸ்மாக் கடைகள் காணப்படுகிறது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு  வேண்டும், தமிழ்நாட்டில் உள்
    ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று கூறினார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 01, 2025 20:46 IST

    சீனா, ஜப்பான் பயணத்தை முடித்து டெல்லி திரும்பினார் மோடி

    சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி திரும்பினார். பிரதமர் மோடி ஜப்பானில் நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டிலும், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பங்கேற்றார். இந்தப் பயணங்களின்போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 



  • Sep 01, 2025 20:41 IST

    சசிகாந்த் செந்தில் எம்.பி உண்ணாவிரதத்தை கைவிட ஸ்டாலின் அறிவுறுத்தினார் - கனிமொழி

    தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலை தி.மு.க எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், “சசிகாந்த் செந்தில் எம்.பி. தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.



  • Sep 01, 2025 20:05 IST

    இந்திய வர்த்தகம் ஒருதலைபட்சமானது: டிரம்ப் குற்றச்சாட்டு

    அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகம் ஒருதலைபட்சமாக உள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். எந்த நாட்டையும் விட இந்தியா அமெரிக்காவிடம் அதிக வரிகளை வசூலிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா அமெரிக்காவிற்கு அதிகப் பொருட்களை விற்கிறது, ஆனால் அமெரிக்காவிடம் இருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது. இதன் காரணமாக வர்த்தக சமநிலையில் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் வாங்குகிறது, ஆனால் அமெரிக்காவிடம் இருந்து குறைவாகவே வாங்குகிறது. அமெரிக்கா பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கான வரிகளை குறைத்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



  • Sep 01, 2025 20:01 IST

    வாக்கு திருட்டு: விரைவில் பல ஆதாரங்கள்; பா.ஜ.க-வினருக்கு ஹைட்ரஜன் பாம்ப் - ராகுல் காந்தி

    க்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “வாக்கு திருட்டு தொடர்பான மேலும் பல ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும். அதுதான் பா.ஜ.க-வினருக்கு எதிரான  ‘ஹைட்ரஜன் பாம்ப்’. அது வெளியான பின்பு பிரதமர் மோடி அவர் முகத்தை மக்களிடம் காட்டவே முடியாது” என்று கூறினார்.



  • Sep 01, 2025 19:24 IST

    ஜெர்மனியில் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,201 கோடிக்கு ஒப்பந்தம்

    ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்  ரூ.3,201 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரயில்வே கதவுகள், பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான ஒப்பந்தம் மற்றும் சுமார் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.



  • Sep 01, 2025 19:21 IST

    இ.பி.எஸ் தலைமை ஏற்று என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க தொடருமா?  - டி.டி.வி தினகரன் பதில் 

    இ.பி.எஸ் தலைமையை ஏற்று என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க தொடருமா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  தொடர்வது பற்றி டிசம்பரில் கட்சி நிர்வாகிகளை ஆலோசித்தி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.



  • Sep 01, 2025 18:45 IST

    ஆப்கானிஸ்தானுக்கு 15 டன் உணவுப் பொருட்களை அனுப்பிய மத்திய அரசு

    நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானுக்கு 15 டன் உணவுப் பொருட்களை மத்திய அரசு அனுப்பியது. வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூடாரம் அமைக்க 1,000 டென்டுகளை வழங்கியது இந்தியா. தேவைப்பட்டால் மேலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.



  • Sep 01, 2025 18:41 IST

    வாக்காளர்களை ராகுல் காந்தி அவமதிக்கிறார்: பா.ஜ.க.

    வாக்காளர்களை ராகுல் காந்தி அவமதிப்பதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மோடியை அவமதிப்பதை ராகுல் காந்தி வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால், ராகுல் காந்தியை மக்கள் நிராகரித்து மோடி மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மோடி தலைமையிலான பாஜகவின் வெற்றிக்குப்பின் மோசடி உள்ளதாக கூறுவதன் மூலம் வாக்காளர்களை ராகுல் காந்தி அவமதிக்கிறார். ராகுல் காந்தியின் இந்த ஆணவத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.



  • Sep 01, 2025 17:50 IST

    ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடு ஈர்ப்பு - அறிவிப்பு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ரயில்வே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மேம்பட்ட பொறியியல் துறைகளில் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 6,250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.



  • Sep 01, 2025 17:24 IST

    ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி ரூ.1.86 லட்சம் கோடி வசூல்

    நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.86 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ. 1.74 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

     



  • Sep 01, 2025 17:21 IST

    24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

    வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்.1 - செப். 7 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Sep 01, 2025 17:13 IST

    11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 01, 2025 17:10 IST

    சென்னை அடுத்த அம்பத்தூர் சாலையில் மீண்டும் பள்ளம்

    சென்னை அடுத்த அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



  • Sep 01, 2025 17:09 IST

    பாக். ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து 5 வீரர்கள் பலி

    பாகிஸ்தானின் கில்கித் - பல்திஸ்தான் மாகாணம் டைமர் மாவட்டத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறக்க விமானி முயற்சித்தார். அப்போது, ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 5 பேரும் உயிரிழந்தனர்.

     



  • Sep 01, 2025 16:34 IST

    2026 தேர்தலில் எந்த கூட்டணியில் அ.ம.மு.க.? -டிடிவி தினகரன் பதில்

    சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை டிசம்பரில் அறிவிப்போம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வேறு, 2026 சட்டமன்ற தேர்தல் வேறு. 2024 மக்களவைத் தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது அ.ம.மு.க. தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும் என்றும் கூறினார்.



  • Sep 01, 2025 16:33 IST

    கொலோன் தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டார் ஸ்டாலின்

     40,000 அரிய தமிழ் நூல்களைக் கொண்ட ஐரோப்பாவின் தமிழியல் ஆய்வுக்கான மையமான கொலோன் பல்கலை. தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் கூறியதாவது; கொலோன் தமிழ்த் துறை மூடப்படுவதை தடுக்க திமுக ஆட்சிக்கு வந்ததுமே ரூ.1.25 கோடி வழங்கினோம். சென்னை, மதுரையை தொடர்ந்து கோவை, திருச்சியில் நூலகம் அமைக்கும் நமது முயற்சிக்கு ஊக்கமாக கொலோன் நூலகம் அமைந்துள்ளது. கொலோன் பல்கலை.க்கு சென்றது அனைவருக்குமான அறிவு மையமாக நூலகங்களை அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக அமைந்தது என முதல்வர் தெரிவித்தார்.



  • Sep 01, 2025 16:07 IST

    234 தொகுதிகளிலும் என்.டி.ஏ. கூட்டணி வெல்லும் - நயினார் நாகேந்திரன்

    நாங்கள் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் எங்கள் என்.டி.ஏ. கூட்டணி 234 தொகுதிகளை வெல்லும் என வந்துள்ளது. தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என வெளியான கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.



  • Sep 01, 2025 15:57 IST

    டி.ஜி.பி நியமனம் - தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டி.ஜி.பி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி நியமன பெயர் பட்டியலை குறிப்பிட்ட காலத்திற்குள் யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பி வைக்கவில்லை என மனுதாரர் ஹென்றி திபென் குற்றம்சாட்டியுள்ளார்



  • Sep 01, 2025 15:42 IST

    நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

    கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்



  • Sep 01, 2025 14:53 IST

    கேரளாவில் பாகனை தந்தத்தால் குத்திக்கொன்ற யானை

    கேரளாவில் ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானையான ஸ்கந்தன் திடீரென மிரண்டு தன் மீது அமர்ந்திருந்த பாகனை கீழே தள்ளி விட்டு தந்ததால் குத்திக் கொன்றது. அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு பாகனையும் தாக்கியது 



  • Sep 01, 2025 14:41 IST

    எதிர்காலத்தில் எந்த மாதிரியான கூட்டணி வரும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் - ஓ.பி.எஸ்

    எதிர்காலத்தில் எந்த மாதிரியான கூட்டணி வரும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என தேசியக் கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்



  • Sep 01, 2025 14:40 IST

    அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டுமென சசிகலா கொடுத்த அறிக்கையை வரவேற்கிறேன் – ஓ.பி.எஸ்

    அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டுமென சசிகலா கொடுத்த அறிக்கையை மனமார வரவேற்கிறேன். பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்



  • Sep 01, 2025 14:16 IST

    560 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் கோவி. செழியன்

    தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 560 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் செப்டம்பர் 8ஆம் தேதிக்குள் பணியில் இணைவர் என உயர்க் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்



  • Sep 01, 2025 14:06 IST

    காஞ்சிபுரத்தில் 10ம் வகுப்பு மாணவியை நாய் கடித்ததால் பரபரப்பு

    காஞ்சிபுரத்தில் 10ம் வகுப்பு மாணவி ஷோபாவை நாய் கடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த நாய் இதுவரை 7 பேரை கடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.



  • Sep 01, 2025 13:54 IST

    இதுவே எனது கடைசி தயாரிப்பு - வெற்றிமாறன்

    இதுக்கு முன் நான் தயாரித்த மனுஷி படம் கோர்ட்டுக்கு போயுள்ளது; இந்தப் படத்திற்கும் நிறைய சவால்கள். தயாரிப்பாளராக இருப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதால், க்ராஸ் ரூட்  தயாரிப்பு நிறுவனத்தின் கடைசி படமாக பேட் கேர்ள் தான் இருக்கும் என்று பேட் கேர்ள் பட செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 



  • Sep 01, 2025 13:21 IST

    பொறுப்பு டி.ஜி.பி பொறுப்பேற்றார் என்பதை எங்காவது பார்த்திருக்கிறோமா? - அண்ணாமலை

    “பொறுப்பு டி.ஜி.பி பொறுப்பேற்றார் என்பதை எங்காவது பார்த்திருக்கிறோமா ? அதுபோன்ற ஒரு அவலத்தை தி.மு.க அரசு அரங்கேற்றி இருக்கிறது. அவர்களுக்குள்ளேயே மோதல் இருந்தால் எப்படி காவல்துறை விளங்கும்?” என்று தமிழ்நாடு பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். 



  • Sep 01, 2025 13:20 IST

    திமுக மீது 100% மக்கள் வெறுப்பு இருக்கிறது: நயினார் நாகேந்திரன்

    திமுக ஆட்சி மீது மக்கள் 100% வெறுப்போடு இருப்பது கண்கூடாக தெரிகிறது. முதல்வர் வெளிநாடு சென்றது குறித்து வெள்ளை அறிக்கை வராது, வெற்று அறிக்கைதான் வரும்; திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதே எங்களின் நோக்கம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 



  • Sep 01, 2025 12:55 IST

    அன்புமணி பதிலுக்காக 2 நாள் காத்திருக்க முடிவு - அருள்

    அன்புமணி பதிலுக்காக மேலும் 2 நாட்கள் காத்திருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாமக எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து சீலிடப்பட்ட கவரில் ராமதாஸிடம் அறிக்கை தந்துள்ளோம். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்டம்பர் 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார் என்றும் கூறினார்.



  • Sep 01, 2025 12:46 IST

    சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் திருவுருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

    சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் | பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். 



  • Sep 01, 2025 12:40 IST

    இந்தியா, ரஷ்யா உறவு புதிய உச்சம் - பிரதமர் மோடி

    இந்தியா - ரஷ்யா உறவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது, கடினமான நேரங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒன்றாக நின்றது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதியை கொண்டு வர வேண்டும், ரஷ்யா உடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம். புதினின் இந்திய வருகையை இந்தியர்கள் எதிர்நோக்கி உள்ளனர். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.



  • Sep 01, 2025 12:39 IST

    தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

    தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்த தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. அக்.6-க்குள் மனுவுக்கு பதிலளிக்க சென்னை மாநகராட்சி, ஒப்பந்த நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல்முறையீடு செய்தது.



  • Sep 01, 2025 12:27 IST

    சென்னைக்கே திரும்பி வந்த ஏர் இந்தியா விமானம்

    அந்தமான் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் மோசமான வானிலையால் சென்னைக்கே திரும்பியது. அந்தமான் செல்ல வேண்டிய 174 பயணிகள், சென்னை விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தமான் விமான நிலைய பகுதியில், தரைக்காற்று அதிகமாக வீசியதால் விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



  • Sep 01, 2025 12:26 IST

    சிறுபான்மை நிறுவனங்களை பாதிக்குமா? - உச்சநீதிமன்றம்

    சிறுபான்மை நிறுவனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?; அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்று உயர் அமர்வு வழக்கை விசாரிக்க பரிந்துரைத்து உச்சநீதிமன்ற நீதிபதி திபான்கர் தத்தா அமர்வு உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 01, 2025 11:59 IST

    ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 622 பலி; 1300 பேர் படுகாயம் 

    ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 622 பேர் பலியாகி உள்ளனர். 1300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



  • Sep 01, 2025 11:37 IST

    ஒரே நாளில் 77 டன் கழிவுகள் அகற்றம் 

    விநாயகர் சிலை கரைக்கப்படும் 5 கடற்கரைப் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 77 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.



  • Sep 01, 2025 11:36 IST

    ஒரே காரில் பயணம் 

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நிறைவடைந்த பிறகு ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியும் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்க ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். 



  • Sep 01, 2025 11:31 IST

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - 250 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 250 பேர் பலியாகி உள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 



  • Sep 01, 2025 10:56 IST

    பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஷாங்காய் மாநாட்டில் கூட்டு பிரகடனம்

    பஹல்காம் தாக்குதலை கண்டித்து சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கூட்டு பிரகடனம் கொண்டுவரப்பட்டது. ஏப்ரல் 22ல் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள், ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.



  • Sep 01, 2025 10:55 IST

    வலுவான இணைப்பு என்பது வர்த்தகத்திற்கு மட்டுமல்ல - ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு 

    ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கூறுகையில், "வலுவான இணைப்பு என்பது வர்த்தகத்திற்கு மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கும் கதவுகளைத் திறக்கிறது என்று இந்தியா எப்போதும் நம்புகிறது" என்றார். இந்த சூழலில், சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் இந்தியா செயல்பட்டு வருவதாகவும், அவை ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அணுகலைப் பெற உதவும்." என்று கூறினார்.  

    சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ், சீனா-பாகிஸ்தான் பொருளாதார சாலையை குறிப்பிட்டு பேசிய மோடி, "இணைப்பு முயற்சிகள் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும். இறையாண்மையைத் தவிர்க்கும் இணைப்பு, நம்பிக்கையையும் அர்த்தத்தையும் இழக்கிறது," என்று அவர் கூறினார்.



  • Sep 01, 2025 10:52 IST

    வெளிப்படையாக தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை எப்படி ஏற்க முடியும்? - ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு 

    ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, "பஹல்காம் தாக்குதல் இந்தியா மீதான தாக்குதல் மட்டுமல்ல, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட நாடுகளுக்கும் மக்களுக்கும் ஒரு வெளிப்படையான சவாலாக இருந்தது. வெளிப்படையாக தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை எப்படி ஏற்க முடியும்? பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நாம் ஒற்றுமையாக எதிர்த்துப் போராட வேண்டும்; இது மனிதகுலத்திற்கு நமது பொறுப்பு" என்று கூறினார். 



  • Sep 01, 2025 10:21 IST

    தீவிரவாதம் ஒருநாட்டிற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே சவால் - சீனாவில் மோடி பேச்சு 

    "பஹல்காம் தாக்குதலின் போது இந்தியாவுக்கு ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி. தீவிரவாதம் ஒருநாட்டிற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே சவால். சில நாடுகள் தீவிரவாத‌த்தை வெளிப்படையாக ஆதரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, தீவிரவாதம் எந்த வடிவத்தில், நிறத்தில் இருந்தாலும் ஒருமனதாக எதிர்க்க வேண்டும்" என்று சீனாவில் 2வது நாளாக நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 



  • Sep 01, 2025 09:55 IST

    பஹல்காமில் பயங்கரவாதத்தின் கோர முகத்தை நாங்கள் பார்த்தோம்: பிரதமர் மோடி

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "பஹல்காமில் சமீபத்தில் இந்தியா பயங்கரவாதத்தின் கோர முகத்தைப் பார்த்தது.



  • Sep 01, 2025 09:52 IST

    உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு குரல் எழுப்பிய - பிரதமர் மோடி

    'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை' "பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு" என்று விரிவுபடுத்திய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலை எழுப்பியதோடு, சபஹார் துறைமுகம் மற்றும் இணைப்பின் கீழ் உள்ள சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து நடைபாதை குறித்தும் பேசினார்.



  • Sep 01, 2025 09:38 IST

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு - பிரதமர் மோடி உரை

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்காமல் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.



  • Sep 01, 2025 09:23 IST

    'இந்த ஆண்டு 2 பில்லியன் யுவான் மானியங்கள்'

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இந்த ஆண்டு சீனா 2 பில்லியன் யுவான் மானியத்தை வழங்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.



  • Sep 01, 2025 09:21 IST

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிற உறுப்பு நாடுகளில் 84 பில்லியன் டாலர் முதலீடு - சீன அதிபர் ஜி ஜின்பிங்

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிற உறுப்பு நாடுகளில் சீனா 84 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.



  • Sep 01, 2025 09:20 IST

    கடன்கள், உதவித்தொகை மற்றும் பிஎச்டி திட்டம்

    அடுத்த மூன்று ஆண்டுகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு சீனா கூடுதலாக 10 பில்லியன் யுவான் கடனை வழங்கும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் உரையாற்றினார். தற்போதுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக்கி, எஸ்சிஓ பிஎச்டி திட்டத்தை தொடங்குவோம் என்றார்.



  • Sep 01, 2025 09:19 IST

    கொடுமைப்படுத்தும் நடைமுறைகள், பனிப்போர் மனநிலையை எதிர்ப்போம்: ஜி ஜின்பிங்

    பனிப்போர் மனநிலை, கூட்டணி மோதல் மற்றும் மிரட்டல் நடைமுறைகளை எதிர்ப்போம் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்.



news updates Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: