scorecardresearch

மு.க. ஸ்டாலின் வலியுறுத்திய ஒற்றுமை.. நாகர் தி.மு.க.வுக்கு ரகசிய உத்தரவா?

எஞ்சிய வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறை வேற்றுவோம். இதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

Stalin inaugurated Karunanidhi statue at DMK office in Nagercoil
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலவருமான கருணாநிதி சிலையை திறந்துவைத்தார்.

அப்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்தில் கழக ஆட்சி அமைத்த 22 மாதங்களில் தேர்தல் காலத்தில் நாம் கொடுத்த வாக்குறுதியில் பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

எஞ்சிய வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறை வேற்றுவோம். இதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
ஒருவருக்கு, ஒருவர் பகைமையுடன் செயல்பட்டால் நம் இலக்கை எட்ட முடியாது” என தனது உரையை நிறைவு செய்தார்.

நாகர்கோவிலில் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர் இரு பிரிவுகளாக செயல்பட்டுவருகின்றனர். தி.மு.க.வில் முக்கிய பதவிகளை இருவரும் பிடித்து விடக்கூடாது என ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
நாகர்கோவில் மேயர் பதவியை மகேஷ் பிடித்து விடக்கூடாது என சுரேஷ் ராஜன் முட்டுக் கட்டை போட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலினின் பேச்சு முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜனுக்கு தெரிவித்த ஒரு ரகசிய உத்தரவு என கழக தொண்டர்கள் பேசிய படியே கலைந்து சென்றதை கேட்க முடிந்தது.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Stalin inaugurated karunanidhi statue at dmk office in nagercoil