2024-ம் ஆண்டு நடைபெற்ற 18-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பது அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க :Stalin’s leadership drives INDIA sweep in Tamil Nadu, BJP fails to open account
இந்தியாவில் 18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கிய 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி, பா.ஜ.க – பா.ம.க தலைமையில் என்.டி.ஏ கூட்டணி, அதிமுக தேமுதிக கூட்டணி என 3 கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.
7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) நடைபெற்றது. இதில் தமிழகத்தில் தொடக்கம் முதலே 35 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்த இந்தியா கூட்டணி தற்போது பாண்டிச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளையும் கைப்பற்றும் நிலையில் வந்துள்ளது. இதேபோல் 2019-ம் ஆண்டு தமிழகத்தில் 39 மற்றும் பாண்டிச்சேரி 1 என 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் தலைமையிலான இந்த கூட்டணியை சாதுர்யமாக கைாயண்டு, மாநிலத்தின் மிகப்பெரிய கூட்டணியாக வலுப்படுத்தி, 2019-ம் ஆண்டு இருந்த நிலையை அதை விட பலமாக உருவாக்கியுள்ளார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் உள்ளன.
2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி சார்பில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமகவின் சௌமியா அன்புமணி மட்டுமே, முன்னிலை வந்துகொண்டிருந்தார். மற்றபடி பாஜக சார்பில் போட்டியிட்ட, அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய பிரபலங்கள் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பாதி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்ட நிலையில், நிலைமை அப்படியே உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் முயற்சிகளை விட, ஓபிசி-வன்னியர் சமூகத்தை மையமாகக் கொண்ட பாமகவின் பிரச்சாரத்திற்கு அன்புமணியின் முனைப்புகளையும் தருமபுரி தொகுதியில் முன்னிலை பெற முக்கிய காரணமாக அமைந்தது. விருதுநகரில், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் பின்னடைவை சந்தித்த நிலையில், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், 9,000 வாக்குகள் முன்னியில் இருந்து சற்று நேரத்தில் 390 ஆகக் குறைந்துள்ளது.
அதேபோல் அதிமுகவின் கோட்டையான நாமக்கல்லில் திமுக 1500 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. அ.தி.மு.க., பல இடங்களில் கடும் போட்டி அளித்திருந்தாலும், கணிசமான சவால்களை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அப்படியே இருப்பதாகத் தோன்றினாலும், சென்னை தெற்கு, சென்னை சென்ட்ரல், வேலூர், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ராமநாதபுரம் போன்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளனர்.
அதேபோல் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, தென்காசியின் முக்கியமான பகுதிகளில், தமிழ் தேசியவாதி சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை விட அதிமுக பின்தங்கியுள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் சில இடங்களில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கலாம். ஆனால் சுயமரியாதை எங்களுக்கு முக்கியமானது. எங்கள் வாக்கு வங்கி அப்படியே உள்ளது, கட்சியே முதன்மைத் தேர்வாக இருந்தது, தற்காலிக தேர்தல் உத்தி அல்ல என்று கூறியுள்ளார்
தமிழகத்தில் 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் வாக்காளர்கள் ஏகமனதாக முடிவு எடுத்துள்ளனர். 2014ல் 39 இடங்களில் அதிமுக 37 இடங்களிலும், 2019ல் திமுக 38 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2004 தேர்தலிலும் திமுக 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2009 தேர்தல் விதிவிலக்காக 27-12 என்ற விகிதத்தில் தி.மு.க. பெரும்பான்மை பெற்றது. 2024 தேர்தல் முடிவுகள் சிறிய சவால்களுடன் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.