'அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி பயத்தால் ஸ்டாலின் புலம்புகிறார்'... எடப்பாடி பழனிசாமி தாக்கு

கோவை தொண்டாமுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திமுக ஆட்சி ஊழல் நிறைந்தது என்றும், எல்லா துறைகளிலும் முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

கோவை தொண்டாமுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திமுக ஆட்சி ஊழல் நிறைந்தது என்றும், எல்லா துறைகளிலும் முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

author-image
WebDesk
New Update
EDAPPADI K PALANISAMI ADMK Manamadurai speech Tamil News

'அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி பயத்தால் ஸ்டாலின் புலம்புகிறார்'... எடப்பாடி பழனிசாமி தாக்கு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சிப் பயணக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அத்துடன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.

கூட்டணி மற்றும் தேர்தல்:

Advertisment

2026 தேர்தலில் தி.மு.க. 200 இடங்களில் வெல்லும் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருக்கலாம், ஆனால் மக்களுக்கு பலம் அதிமுகவிற்கு தான் உள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி அமைத்ததை கண்டு ஸ்டாலின் பயத்தில் புலம்புகிறார். இது அவர்களின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. மத்தியில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது போல, தமிழகத்திலும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டுகள்:

தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி. ஒவ்வொரு துறையிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய அரசாங்கமாக தி.மு.க. இல்லை. பத்திரப்பதிவு முதல் அனைத்து வேலைகளுக்கும் கமிஷன் கேட்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் கட்டணங்கள் மற்றும் வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன (மின் கட்டணம் 67%, வீட்டு வரி 100%). அத்தியாவசியப் பொருட்களான அரிசி, எண்ணெய் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு பாட்டில்கள் விற்கப்படுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி தி.மு.க.விற்கு செல்கிறது. சுகாதாரத்துறையில் சிறுநீரக திருட்டு போன்ற கொடுமை நடப்பதாகவும், தி.மு.க எம்.எல்.ஏ க்களுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள்:

அத்திக்கடவு - அவிநாசி 2-ம் கட்ட திட்டம், திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அது நிறைவேற்றப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம், வண்டல் மண் எடுக்கும் திட்டம் போன்றவை மீண்டும் செயல்படுத்தப்படும். தி.மு.க ஆட்சியில் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள், அம்மா உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, லேப்டாப் திட்டம் போன்ற அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும்.

Advertisment
Advertisements

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை, தலித் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் போன்ற திட்டங்கள் வழங்கப்படும். கோவைக்கு மெட்ரோ ரயில், சிப்காட் தொழிற்பேட்டை போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

விவசாயிகள் நலன்:

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், அவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மரத்தான் ஓடும் அமைச்சர் மற்றும் முதல்வருக்கு விவசாயிகளின் கஷ்டம் புரியவில்லை என்று கிண்டல் செய்தார்.

சிறுபான்மையினர் நலன்:

சிறுபான்மையின மக்களை அ.தி.மு.க. அரசு கண் இமை போல பாதுகாத்தது. நோன்பு கஞ்சிக்கு அரிசி, ஹஜ் பயண மானியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம் போன்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது.

எஸ்.பி வேலுமணி குறித்து:

எஸ்.பி வேலுமணி ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்றும், தொண்டாமுத்தூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெற்ற பெட்டி பெட்டியாக வாங்கிய மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

"மக்களுடன் ஸ்டாலின்" திட்டம் என்பது ஒரு ஏமாற்று வேலை. அதில் பெறப்படும் மனுக்கள் குப்பையில் வீசப்படுகின்றன. தி.மு.க. பினாமிக்கு சொந்தமான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வன அழிப்பு நடப்பதாகவும், அதை மறைக்க வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இறுதியாக, 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து, தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Coimbatore Edappadi K Palaniswami

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: