தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 15 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலின் இதுவரை சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் 16 முன்னணி நிறுவனங்களில் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொழிற்சாலையை மூடி வெளியேறிய முன்னணி கார் நிறுவனம் ஃபோர்டு, முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின் மீண்டும் ஃபோர்டு இந்தியா வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் தங்களது உற்பத்தியை நிறுத்தி வெளியேறியது. சென்னை மறைமலை நகரில் இருந்த தொழிற்சாலையும் மூடப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட X பதிவில், "தமிழகத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
30 ஆண்டுகளாக தமிழகத்தில் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றியும் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“