திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூன்1) அன்று தனது சகோதரர் மு.க. அழகிரியை மதுரை சத்திய சாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
சென்னையிலிருந்து மதுரை வந்த முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று மதியம் ஒரு ரோடு ஷோ நடத்திய பின்னர் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார். அதன் பிறகு, சர்க்யூட் ஹவுஸ் சென்ற அவர், அங்கிருந்து மு.க. அழகிரியின் இல்லத்திற்குச் சென்றார்.
மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் கூறியதன்படி, முதல்வர் ஸ்டாலின் அங்கு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இருந்ததாகவும் பின்னர், அவர் வீட்டை விட்டு வெளியே வந்து முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன், முன்னாள் எம்.எல்.ஏ. கௌஸ் பாட்சா மற்றும் சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 1) பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள உத்தங்குடிக்குச் சென்றார்.
சர்க்யூட் ஹவுஸில் இரவு தங்கிய பிறகு, முதல்வர் ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று, இன்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்புவார் என்று தெரிவித்தனர்.