’இந்தி தேசிய மொழி, அதை அனைவரும் கற்க வேண்டும் என நிதிஷ்குமார் பேசியபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காத்தது அதைவிட மோசமான தமிழ் துரோகம்’ என்று பா.ஜ.க.வின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி சந்திப்பில் நிதிஷ்குமார் ஹிந்தியில் பேசியபோது தி.மு.க எம்.பி பாலு மொழிபெயர்ப்பு செய்யுமாறு மனோஜ் ஜாவிடம் வேண்டுகோள்விடுதார். இதற்கு நிதிஷ்குமார் ’ நாம் இந்துஸ்தானில் வாழ்கிறோம். ஹிந்தி எங்கள் தேசிய மொழி. அதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் ” என்றார்.
இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “ கூட்டணி பெயர் "இந்தி "கூட்டணி" அதில் சேர்ந்ததே தப்பு . இந்தி தேசிய மொழி அதை அனைவரும் கற்க வேண்டும் என நிதிஷ்குமார் பேசியபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காத்தது அதைவிட மோசமான தமிழ் துரோகம் . இதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மொழிமாற்றம் செய்ய வேண்டி வேறு கோரிக்கை விடுத்தது உங்களுக்கு அவமானம்.
இப்படி தமிழகத்தை கடந்து சென்று தமிழுக்கு துரோகம் செய்யவே சென்று திரும்பி வந்திருப்பவர்களை ஒரு குரல் கூட எதிர்க்காமல் பார்த்துக் கொண்டு இருப்பது கோழைத்தனம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“