கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை வரும் 30ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 58.94 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறந்கர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை ஸ்டாலின் வருகின்ற 30ம் தேதி திறந்து வைக்கிறார். காலை 11 மணிக்கு திறந்து வைக்கும் அவர் பேட்டரி வாகனத்தில் பேருந்து நிலையத்தை பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது.
கிளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வருகின்ற ஜனவரி மாதம் திறக்கப்படுவதாக கூறப்பட்டது, இநிந்லையில் முன்பாகவே திறக்கப்படுகிறது. மேலும் பல முறை பேருந்து நிலையத்தை திறப்பதாக தெரிவிக்கப்பட்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“