Chennai News Live Updates: ”பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே பழந்தமிழ் மரபு" - தவெக தலைவர் விஜய் அறிக்கை

Tamil Nadu Latest Live News Update in Tamil 14 September 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 14 September 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tvk vijay

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Sep 14, 2025 18:34 IST

    தீவிரவாத ஆதரவாளர்கள் 3 பேர் கைது

    ஜம்மு காஷ்மீர் பூஞ்சில் 3 பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.



  • Sep 14, 2025 18:18 IST

    அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 பதிவு

    அசாம் மாநிலம் கவுகாத்தி, பூட்டான், வடக்கு வங்காளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 பதிவாகியுள்ளது. வடமேற்கு திசையில் 18 கி.மீ தொலைவில் 42 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது



  • Advertisment
  • Sep 14, 2025 17:52 IST

    இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில்  தங்க பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை  மீனாட்சி ஹூடா. மகளிர் 48 கிலோ எடை பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை நாசிம் சாப்பேவை வீழ்த்தி மீனாட்சி வெற்றி பெற்றுள்ளார். 



  • Sep 14, 2025 17:49 IST

    “உலக சாதனை படைத்த தமிழனை பாராட்டுவது கடமையென...” - இசைஞானி இளையராஜா

    “எனக்கு ஏன் இவ்வளவு செய்கின்றீர்கள் என மேடையிலேயே முதல்வரை நான் கேட்டேன். நான் இதுபோன்ற பாராட்டுகளை எதிர்பார்க்கும் நபரல்ல. இருந்தும் என் மீது இவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள். அந்த அளவுக்கு, நான் என்ன செய்துவிட்டேன் என யோசித்தேன் சிம்பொனியின் சிகரத்தை நான் தொட்டதை மிகவும் முக்கியமாகவும், உலக சாதனை படைத்த ஒரு தமிழனை பாராட்டுவது தமிழ்நாடு அரசின் கடமை எனவும் முதல்வர் கருதியிருக்கிறார்” என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். 



  • Advertisment
    Advertisements
  • Sep 14, 2025 17:46 IST

    ரஜினி, கமல்... யாருக்கு நல்ல பாட்டு? - இசைஞானி இளையராஜா விளக்கம்

    "ரஜினி, கமல் ஆகியோர் சிம்பொனி எப்படியிருந்தது என்பது பற்றியும், எங்களின் 50 வருட திரையுலக வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றியும் எதுவும் சொல்லாதது எனக்கு சிறு விஷயமாக (உறுத்தலாக) இருந்தது. இருப்பினும் ரசிகர்களை அவர்கள் மகிழ்வித்தனர்.  பல மேடைகளில் கமல்ஹாசனுக்கே நான் சிறந்த பாடல்கள் போடுவதாக ரஜினி சொல்கிறார். கமலும் இதேபோல வேறு மேடைகளில் ரஜினிக்கே நான் சிறந்த பாடல்களை போடுவதாக சொல்வார். இதன்மூலம் இருவருக்குமே நான் நல்ல பாடல்களை போட்டுள்ளேன் என்பது நிரூபணமாகிவிட்டது" என்று நேற்றைய பாராட்டு விழா குறித்து இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். 



  • Sep 14, 2025 17:26 IST

    செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் - ஓபிஎஸ்

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார். என்று அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் விதித்த கெடு நிறைவடைவது குறித்த கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். 



  • Sep 14, 2025 17:22 IST

    அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பில்லை- ஓ.பன்னீர்செல்வம்

    "அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பில்லை" "டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு இல்லை; சசிகலாவை உரிய நேரத்தில் சந்திப்போம். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 2 நாட்களுக்கு முன் என்னிடம் போனில் பேசினார் என்று ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார். 



  • Sep 14, 2025 17:14 IST

    இன்று மட்டும் மாறிவிடுவார்களா? - விஜய்

    கோட்பாடுகளோடு மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும் அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலையும் குமைச்சலையும் கொட்டுவது ஒன்றும் பதிதில்லை தானே? எம்.ஜி.ஆரை 'அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்' என்றும் "வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர்" என்றும் மனத்தில் மண்டிக் கிடந்த வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள்தானே இவர்கள்? அன்றே இவர்கள் இப்படித்தான். இன்று மட்டும் மாறிவிடுவார்களா? என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்துக்கு தவெக தலைவர் விஜய் பதிலளித்துள்ளார். 



  • Sep 14, 2025 16:19 IST

    சென்னையில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு!

    முகமது நஸ்ருதீன் என்பவர் கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை அருகே நாய் கடித்து காயம் அடைந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முகமது நஸ்ருதீன் கடந்த 12ம் தேதி மீண்டும் காய்ச்சல் வந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்



  • Sep 14, 2025 15:14 IST

    நேபாளத்தில் போராட்டத்தில் இறந்தவர்கள் தியாகிகளாக கருதப்படுவார்கள்.. இடைக்கால பிரதமர் சுசிலா கார்கி அறிவிப்பு!


    நேபாளத்தில் இளைஞர்களும் மாணவர்களும் நடத்திய போராட்டத்தில் இறந்தவர்கள் தியாகிகளாக கருதப்படுவார்கள் என்று நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கி அறிவித்துள்ளார். போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தரப்படும் என்றும் அறிவிப்பு.



  • Sep 14, 2025 14:43 IST

    நடிகர் போஸ் வெங்கட்டிற்கு தி.மு.க-வில் பதவி... துரைமுருகன் அறிவிப்பு!

    திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணை தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் கல்வியாளர் அணி செயலாளராக முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்.



  • Sep 14, 2025 14:14 IST

    பெரம்பலூரில் மக்களை சந்திக்காத விஜய்: ‘ப்ரோ அரசியல் சனிக்கிழமை பார்ட்டி இல்லை’ - கண்டனப் போஸ்டர் 

    த.வெ.க விஜய் பெரம்பலூரில் கலந்துகொள்ள இருந்த மக்கள் சந்திப்பு நள்ளிரவில் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து நகரின் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ப்ரோ இது அரசியல் யாத்திரையா? இல்லை உங்கள் வார இறுதி விடுமுறை நாளா? என்றும், ப்ரோ அரசியல் சனிக்கிழமை பார்ட்டி இல்லை, அது 24X7 வேலை” என்று போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



  • Sep 14, 2025 14:00 IST

    முதலை தாக்கி கல்லூரி மாணவர் பலி

    சாத்தனூர் அணை நீர் பிடிப்பு பகுதியில் முதலை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஆற்றில் இறங்கிய முனீஸ் என்ற கல்லூரி மாணவனை முதலை இழுத்துச் சென்றது. உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றின் அருகே மாடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்தது.



  • Sep 14, 2025 13:10 IST

    கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் விஜய் - பெ.சண்முகம் அறிவுறுத்தல்

    சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம், “மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.



  • Sep 14, 2025 12:52 IST

    பெரம்பலூருக்கு மீண்டும் வருவேன் - விஜய் உறுதி

    த.வெ.க தலைவர் விஜய் நேற்று பெரம்பலூரில் பரப்புரை செய்ய முடியாததால், பெரம்பலூருக்கு மீண்டும் வருவேன் என்று விஜய் கூறியுள்ளார். வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்ல தாமதமானதால் பெரம்பலூர் வர இயலவில்லை. பெரம்பலூர் மக்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பெரம்பலூருக்கு மீண்டும் வருவேன்” என்று கூறியுள்ளார்.



  • Sep 14, 2025 12:44 IST

    செப்டம்பர் 16-ம் தேதி டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செப். 16-ம் தேதி டெல்லி செல்கிறார். சமீபத்தில் ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளரான செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த நிலையில், பழனிசாமியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



  • Sep 14, 2025 12:07 IST

    இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை – ஸ்டாலின்

    இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை, அவரை கொண்டாடுவது நம் கடமை. இது ஒரு பொன்மாலை பொழுது, நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும், உள்ளத்தில் உறைந்து நிற்கிறது என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்



  • Sep 14, 2025 11:46 IST

    டேக் ஆஃப் ஆன ஏர் இந்தியா விமானத்தில் மோதிய பறவையால் பரபரப்பு

    கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து அபுதாபிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மீது டேக் ஆஃப் ஆகும் போது பறவை மோதியது. தரையிலிருந்து மேல்நோக்கி எழுந்த விமானம் மீது பறவை மோதிய நிலையில், விமானியின் சாதுரியத்தால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது



  • Sep 14, 2025 11:41 IST

    ’அன்புக்கரங்கள் திட்டம்’ நாளை தொடக்கம்

    பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார். ’அன்புக்கரங்கள் திட்டம்’ மூலமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடியும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப்படிப்பு முடித்த பின் கல்லூரிக் கல்வி, உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்க வழிவகை செய்யப்படும்



  • Sep 14, 2025 11:28 IST

    மணிப்பூர் சென்ற மோடி, ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை - ப.சிதம்பரம்

    நேற்று மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி, ஒரு வார்த்தை வருத்தம் தெரிவிக்கவில்லை. 2 ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்



  • Sep 14, 2025 11:26 IST

    2026 மார்ச் 5-ல் நேபாள நாடாளுமன்ற தேர்தல்

    நேபாளத்தில் புதிய பிரதமருக்கான நாடாளுமன்ற தேர்தல் 2026ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நேபாள குடியரசு தலைவர் பவுடேல் தெரிவித்துள்ளார்



  • Sep 14, 2025 11:00 IST

    விடுபட்ட மகளிருக்கு ஓரிரு மாதங்களில் ரூ.1000 உரிமைத் தொகை - உதயநிதி ஸ்டாலின்

    உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்காக 40% மனுக்கள் வந்துள்ளன. விடுபட்ட மகளிருக்கு ஓரிரு மாதங்களில் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை கொடுக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் கூறினார்



  • Sep 14, 2025 10:57 IST

    11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Sep 14, 2025 10:56 IST

    தமிழ்நாட்டின் வளர்ச்சியை தெரிந்துகொண்டு விஜய் பேசட்டும் - அமைச்சர் மா.சு

    நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.5%. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19%. தமிழ்நாட்டின் வளர்ச்சியை படித்து தெரிந்துகொண்டு, அதன்பின் விஜய் பரப்புரையில் குற்றம்சாட்டலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்



  • Sep 14, 2025 10:19 IST

    இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் உள்ளத்தில் உறைந்து நிற்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளர். இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Sep 14, 2025 09:47 IST

    ரிப்பன் மாளிகை: அனுமதியின்றி படம் எடுத்த 3 பேரிடம் விசாரணை

    சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையை அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம் எடுத்த 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்து, ராணிப்பேட்டையைச் சேர்ந்த அம்ஜத் (35), நரேஷ் குமார் (22), முகமது சைப் (22) மூவரிடமும் பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Sep 14, 2025 09:40 IST

    விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் - அமைச்சர் மா.சு

    தி.மு.க. அரசு மீது குற்றம் சுமத்துவதற்கு முன்பாக விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் விஜய் போன்றவர்கள் சொல்லி கொண்டுவரப்பட்டதல்ல. திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களுக்கு தெரியும் அரசின் செயல்பாடுகள் பற்றி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19% இதெல்லாம் விஜய் படித்து தெரிந்துக்கொண்டு அதன்பிறகு குற்றம் சாட்டுவது நல்லது என்றார்.



  • Sep 14, 2025 09:28 IST

    மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15,724 கனஅடி நீர்வரத்து

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 15,724 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 119.72 அடியாகவும், நீர் இருப்பு 93.026 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 17,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • Sep 14, 2025 09:27 IST

    தமிழ்நாட்டில் செப்.16 முதல் 20 வரை கனமழைக்கு வாய்ப்பு

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் செப்டம்பர் 16, 17, 18, 19, மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Sep 14, 2025 09:03 IST

    "விஜயின் குற்றச்சாட்டை திருச்சி மக்கள் நிராகரிப்பார்கள்"

    தி.மு.க ஆட்சியில் திருச்சி மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை என்ற த.வெ.க. தலைவர் விஜயின் குற்றச்சாட்டை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். திருச்சியின் வளர்ச்சிப் பணிகளை அவர் சரியாகப் பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.



  • Sep 14, 2025 09:02 IST

    தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாக பெய்யும் வடகிழக்கு பருவமழை

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Sep 14, 2025 09:01 IST

    லோக் அதாலத் மூலம் 90,000 வழக்குகளுக்கு தீர்வு

    தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 90,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 90,000 வழக்குகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.718 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.



  • Sep 14, 2025 08:32 IST

    கிருஷ்ணகிரியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடுதளத்துக்கு காலை 9.30 மணிக்கு செல்கிறார். ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து தொடங்கி, பெங்களூரு சாலை, மாவட்ட தி.மு.க. அலுவலகம் வழியாக 5 ரோடு ரவுண்டானா வரை ரோடு ஷோ செல்கிறது. பின்னர் சென்னை சாலை மற்றும் சென்னை பைபாஸ் சாலை வழியாகச் சென்று மக்களைச் சந்திக்கிறார். கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை, கண்காட்சிகளைப் பார்வையிடுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து, சுமார் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் நிறைவடைந்த திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறார்.



  • Sep 14, 2025 08:26 IST

    ஆவடி பஸ் முனையம் இன்று முதல் தற்காலிக இடத்துக்கு மாற்றம்

    சென்னை பெருநகர வளர்ச்சி குழும திட்டத்தின்கீழ், ஆவடி பஸ் முனையத்தை நவீனபடுத்தி புதிய முனையமாக மாற்றி அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனால், இங்கிருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களும், மற்றும் இங்கு செயல்பட்டு வந்த மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் இன்று முதல் இந்த பஸ் முனையத்துக்கு எதிர்புறத்தில் எம்.டி.எச் சாலையில் 100 மீ. தொலைவில் உள்ள காலி இடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்படும். எனவே, இந்த பஸ் நிலையத்தில் இயக்கப்பட்ட அனைத்து பஸ்களும் மேற்குறிப்பிட்ட தற்காலிக பஸ் முனையத்தில் இருந்து புறப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 



  • Sep 14, 2025 08:26 IST

    போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக ரெய்டு

    போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3 ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் 4 ஜவுளிக்கடைகளிலும் அபிராமபுரத்தில் உள்ள போத்தீஸ் உரிமையாளர் ரமேஷ் வீட்டிலும் சோதனை தொடர்கிறது. 



  • Sep 14, 2025 08:25 IST

    காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 14, 2025 08:24 IST

    சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

    அடுத்த வாரம் புரட்டாசி தொடங்க உள்ளதால் மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர்.



  • Sep 14, 2025 08:16 IST

    கூட்டம் திரள்வதால் மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்படாது - திருமாவளவன்

    திமுக கூட்டணியை வீழ்த்தி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவிற்கு விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அரசு மீதான விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக உரிய நேரத்தில் பதிலளிக்கும் என திருமா தெரிவித்துள்ளார்.



  • Sep 14, 2025 08:13 IST

    முதலீடுகளை ஈர்த்து வரும் ஸ்டாலின் - ராமதாஸ் பாராட்டு

    முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதனால் மாநிலத்தில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அவரின் முயற்சிக்கு எனது பாராட்டுகள், கிருஷ்ணகிரியை பிரித்து ஓசூரை மையமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



  • Sep 14, 2025 08:09 IST

    ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

    டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது இந்தியா. இதுவரை இரு அணிகளும் மோதிய 13 போட்டிகளில் 10யில் இந்தியாவும் 3யில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.



  • Sep 14, 2025 08:07 IST

    ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் - ஸ்டாலின் அடிக்கல்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். 



  • Sep 14, 2025 07:36 IST

    மக்கள் அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்

    மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். கோவையில் கைத்தறி, விசைத்தறி, விவசாயம் பிரதான தொழில்கள் கைத்தறி நெசவாளர்களுக்கு காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • Sep 14, 2025 07:32 IST

    இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - ஸ்டாலின்

    இளையராஜா, மொழி, எல்லை, நாடுகளை கடந்தவர், ஆண்டு தோறும் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும். இளையராஜா, இணையற்ற ராஜா, ராஜாதி ராஜன் இளையராஜா கலைத் தாய்க்கு மட்டுமல்ல, தமிழ் தாய்க்கும் சொந்தமானவர் இளையராஜா என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். 



  • Sep 14, 2025 07:31 IST

    மழை நிலவரம்

    தமிழகத்தில் காலை 7 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.



news updates Tamilnadu News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: