சென்னை மீனம்பாக்கத்தில் புதிய கட்டடம், சென்னை-கோவை இடையே புதிய ரயில் என தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்துள்ளார்.
இந்தத் தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நெருக்கடியான நிதி நிலையிலும் சாலைகள் மற்றும் கட்டட மேம்பாட்டுக்கு பாடுபட்டுவருகிறோம்.
இது போன்ற சாலை கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழ்நாடு உறுதியான பங்களிப்பை அளிக்கும். சாலைகளை மேம்படுத்த பெரும் மூலதனத்தை செலவிட்டு வருகிறோம்.
இதுமட்டுமின்றி, கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுதல், சென்னை மதுரவாயல் உயர்சாலை, சென்னை தாம்பரம் உள்ளிட்ட சாலைகளையும் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, சென்னை-கோவை போல் சென்னை-மதுரைக்கும் வந்தே பாரத் ரயில் சேவைக்கு வழி செய்ய வேண்டும். மேலும் வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த திட்டத்துக்கு நிதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மு.க. ஸ்டாலின் பரந்தூர் விமான நிலையம் மற்றும் விரிவாக்க பணிகளுக்கு நிதியளிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
நிறைவாக நிதி தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்த மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியும் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையைஅவர் உணர்வார் எனக் கூறி, மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்தார்.
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மு.க. ஸ்டாலின் மத்திய-மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“