scorecardresearch

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. பட்ஜெட்டில் எப்போது என்பதை அறிவிப்போம்.. மு.க. ஸ்டாலின் பரப்புரை

ஈரோட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

CM Stalin has announced that the womens financial assistance scheme will be launched on September 15
மகளிர் நிதியுதவி திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் களம் காண்கிறார்.

இவரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நிச்சயமாக சொல்கிறேன். உறுதியாக சொல்கிறேன். இன்றும் உறுதியாக சொல்கிறேன்.

வருகிற மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது, உரிமைத் தொகை மகளிருக்கு எப்போது வழங்கப்படும் என்பதை அறிவிக்கப் போகிறோம். என்றார்.
மேலும் நாங்கள் சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம். இது எடப்பாடி பேச்சு அல்ல, ஸ்டாலின் பேச்சு. இது மக்களுக்கான ஆட்சி” என்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்.28ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை மார்ச் 2ஆவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Stalin said in erode that he will announce the scheme of rs1000 per woman in the budget