Stalin said TN Governor sent NEET exemption bill to Home ministry: நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற ஆளுனர், உள்துறை அமைச்சகத்திற்கு மசோதாவை அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ”நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: அடுத்த 4 நாட்களுக்கு ’ஜில்’ ஆகப்போகும் மாவட்டங்கள் இவைதான்!
மேலும், ”நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான நமது போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் கூட்டாக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil