அரியலூரில் பல்வேறு அரசி நிகழ்ச்சிகளை பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்கள் தன்னை மறந்து விடுவார்கள் என நினைத்து இபிஎஸ் நாள்தோறும் திமுக அரசுக்கு எதிராக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக விமர்சித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் இன்று (நவ.15) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அந்த வகையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, முதலமைச்சர் வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.174 கோடியில் 21,862 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், மக்கள் தன்னை மறந்து விடுவார்கள் என நினைத்து இபிஎஸ் நாள்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக கூறினார். மேலும் பொய்க்கு மேக் அப் போட்டால் அது உண்மையாகாது, பளிச்சென்று அம்பலப்பட்டு போகும் எனவும் மக்கள் எனக்கு அளிக்கும் ஆதரவைக் கண்டு இபிஎஸ்க்கு சுலக்கம் ஏற்பட்டுள்ளது eன்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், கோவி. செழியன், சி.வி. கணேசன், டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ஆ. ராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“