Advertisment

தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி: முப்பெரும் விழாவில் ஸ்டாலின் உறுதி

Stalin speeches DMK rule should continue in Tamil Nadu permanently: தமிழகத்தில் இனி திமுக ஆட்சி தொடர தொண்டர்களிடம் ஸ்டாலின் வேண்டுகோள்; தந்தையை போலவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி புரிகிறார்; முப்பெரும் விழாவில் துரைமுருகன் பாராட்டு

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி: முப்பெரும் விழாவில் ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் நிரந்தமாக திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று திமுக முப்பெரும் விழாவில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் உரையாற்றியுள்ளார்.

Advertisment

இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. இந்த விழாவில் முரசொலி செல்வம் எழுதிய 'முரசொலி சில நினைவலைகள் ' என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றிய திமுகவினருக்கு பல்வேறு விருதுகளை வழங்கினார். இதில் பாவேந்தர் விருது வாசுகி ரமணனுக்கும், பெரியார் விருது ’மிசா’ மதிவாணனுக்கும், அண்ணா விருது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.மூக்கையாவுக்கும், கலைஞர் விருது கும்மிடிப்பூண்டி வேணுவுக்கும், பேராசிரியர் விருது சட்டப்பேரவை முன்னாள் கொறடா முபாரக்கிற்கும் வழங்கப்பட்டது.

பின்னர் விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சிக்காக உழைத்தவர்களை பெருமைப்படுத்துவதற்காக அண்ணா பிறந்தநாளான இன்று முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 6-வது முறையாக திமுக ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது. திமுக ஆட்சி தொடர்வதற்கான அடித்தளத்தை தொண்டர்கள்தான் அமைத்திட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சி சொன்னதை செய்யும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறோம்.

மேலும், 1985 ஆம் ஆண்டு முதல் முப்பெரும் விழாவில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக உதயமான நாள் ஆகியவற்றை முப்பெரும் விழாவாக கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டிலே 6ஆவது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின் நடைபெறும் முதல் முப்பெரும் விழா, விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவுக்காக உழைத்தவர்கள் வாழக்கூடிய காலத்திலேயே பாராட்டும் வகையில் விருது வழங்கப்படுகிறது.

முரசொலி தாளாக இல்லாமல் வாளாக நம் கையில் இருக்கிறது. முரசொலியில் நானும் சம்பளத்துக்காக வேலை செய்துள்ளேன்.  இளைஞர்களுக்கு இது எதிர்கால வழிகாட்டி, பத்திரிக்கைத்துறை நண்பர்களுக்கு முரசொலி ஒரு பாட புத்தகம். பெரியார் என்றால் சமூக நீதி, அண்ணா என்றால் மணிலா உரிமை, கலைஞர் என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை, பாவேந்தர் என்றால் மொழிப்பற்று, பேராசிரியர் என்றால் இனமானம் என்ற தத்துவத்தின் பிரதிபலிப்புகள்.

மேலும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன். மாதந்தோறும், சட்டப்பேரவையில் நான் அறிவித்த ஒவ்வொரு திட்டம் குறித்தும் ஆய்வு செய்வேன். தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்க வேண்டும். திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட நாம் திமுகவுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் அளவிற்கு நாம் களப்பணியாற்ற வேண்டும். என்று உரையாற்றினார். விழாவில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தந்தையை போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி புரிகிறார். ராஜேந்திர சோழன் அவரது தந்தையை விட சிறப்பாக ஆட்சி புரிந்தார். கருணாநிதி பல ஆண்டுகளில் பெற்றப் புகழை, ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றுள்ளார் என்று முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment