scorecardresearch

முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Nadu chief minister MK Stalin tests positive for Covid 19: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

Stalin tests positive for corona: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருதோடு, தடுப்பூசி பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Stalin tests positive for corona