Advertisment

தென்காசிக்கு ரயிலில் ஸ்டாலின் பயணித்த 'சலூன் கோச்': என்னென்ன வசதிகள்? எவ்வளவு கட்டணம்?

தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க ரயிலில் சென்ற முதல்வர் ஸ்டாலின்; அவர் பயணித்த சலூன் கோச்சின் சிறப்பம்சங்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin Travel by Train in Klaignar Karunanidhi Style, MK Stalin Travel by Train, MK Stalin Travel to Thenkasi by Train, முக ஸ்டாலின் கலைஞர் பாணி ரயில் பயணம், பொதிகை எக்ஸ்பிரஸில் தென்காசி செல்லும் ஸ்டாலின், Podhigai Express, Tamilnadu news

அரசு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்கு ரயிலில் சென்றுள்ள நிலையில், அவர் பயணித்த ரயில் பெட்டியின் வசதிகள் மற்றும் கட்டணம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டம் உதயமான பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பங்கேற்கும் அரசு விழா நடைபெறுகிறது. தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (8-ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதையும் படியுங்கள்: கலைஞர் பாணி ரயில் பயணம்: பொதிகை எக்ஸ்பிரஸில் தென்காசி சென்ற ஸ்டாலின்

இவ்விழாவில் கலந்துக் கொள்வதற்காக, ஸ்டாலின் ரயிலில் தென்காசிக்கு பயணம் செய்தார். முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என் நேரு, ஐ.பெரியசாமி போன்றோருடன் ரயிலில் பயணித்தார்.

இந்தநிலையில், முதல்வர் பயணித்த ரயில் கோச் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் இந்த ரயில் கோச் நகரும் சொகுசு வீடு என்று அழைக்கப்படுகிறது. முதல்வரின் ரயில் பயணத்துக்காக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சலூன் கோச் எனப்படும் இந்தச் சிறப்பு பெட்டி ரயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்பட்டது.

சலூன் (கோச்) பெட்டியின் சிறப்பு அம்சங்கள்:

இந்திய ரயில்வே இந்த சொகுசு பெட்டியை உயர் பதவியில் இருப்பவர்களுக்காகவே உருவாக்கி உள்ளது. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காகவே இந்தப் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெட்டியில் நட்சத்திர சொகுசு ஓட்டலில் உள்ளதுபோல் பல்வேறு வசதிகள் உள்ளன. பாத்ரூம் வசதியுடன் கூடிய 2 பெட்ரூம், பெரிய ஹால், உணவருந்தும் அறை, சோபா, சமையலறை, உதவியாளர்களுக்கு தனி அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தப் பெட்டியில் உள்ளது. குறிப்பாக, சமையலறையில் தேவையான பாத்திரங்கள், வெந்நீர், குளிர்சாதன பெட்டி சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் போன்றவை பொருத்தப்பட்டிருக்கும்.

மேலும், இந்தப் பெட்டி எப்போதும் ரயிலின் கடைசி பெட்டியாகவே இணைக்கப்படும். இதற்கு காரணம், இப்பெட்டியின் பின்புறம் இருக்கும் கண்ணாடி ஜன்னல் மூலம் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே பயணிக்க முடியும். தொந்தரவு இல்லாத பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் இந்த சிறப்பு வாய்ந்த சொகுசு பெட்டியில் பயணிக்க முடியும். இதில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கோச்களில் 18 பேர் வரை பயணிக்க முடியும். இந்திய ரயில்வேயிடம் மொத்தம் 336 சலூன் கோச்கள் உள்ளன. பொதுமக்கள் ஒரு குடும்பமாகவோ, அல்லது 2-3 குடும்பங்களாகவோ புக் செய்து இந்தப் பெட்டியில் பயணிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment