Advertisment

21 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

21 சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்; ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

author-image
WebDesk
New Update
21 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

Stalin urged Governor RN Ravi to grant assent to 21 bills: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார்.

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைகழக சட்ட முன்வடிவு 2022-க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்துமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்காக கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து இருவரும் கலந்தாலோசித்தாகவும் கூறப்படுகிறது. மேலும் 6 பேர் விடுதலை குறித்து முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: உயிரோடு இருப்போமா? திருச்சி முகாமில் கதறும் ஈழத் தமிழர்கள்

இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் உடன் இருந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Stalin Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment