/indian-express-tamil/media/media_files/3LBjj709j7IYSs1oxAKE.jpg)
தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!; 24 ஆம் தேதி ஜல்லிக்கட்டு அரங்கை திறக்க மதுரை வருவதாக முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஜனவரி 24 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்தநிலையில், இதுதொடர்பாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், ”தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் என்ற ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர். புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன். தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல்#ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று,
— M.K.Stalin (@mkstalin) January 17, 2024
அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை
25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.
புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை,
சுமார் 3 இலட்சம்… pic.twitter.com/Jel6NJHwRh
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.