/tamil-ie/media/media_files/uploads/2018/11/cats-7.jpg)
முக ஸ்டாலின் சந்திப்பு
முக ஸ்டாலின் சந்திப்பு : அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக கட்சித் தலைவரான முக ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே. ரங்கராஜன்.
பாலக்கிருஷ்ணன் மற்றும் டி.கே. ரங்கராஜன் ஆகியோர்களை நிலவேம்பு கசாயம் கொடுத்து வரவேற்று பேசினார் மு.க.ஸ்டாலின். மாநிலமெங்கும் டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் இருக்கும் காரணத்தால் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் வழக்கம் சமீப காலத்தில் அதிகரித்து வந்துள்ளது.
ஸ்டாலினிடம் பேசிவிட்டு வந்த பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள் பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே. ரங்கராஜன். அப்போது, மாநிலத்தில் டெங்கு நோயை ஒழிப்பது தொடர்பாக எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை தமிழக அரசு என்று கூறினார்கள்.
தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் மிக விரைவாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏரளாமனவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு தமிழகத்தில் 2 நாட்களில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
"மாநிலம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை தவறாமல் வழங்கி நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்க"
- கழக தலைவர்.https://t.co/Ajo8PnKU4tpic.twitter.com/pQwnk7ReTq
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 5 November 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.