“இந்தியா கூட்டணி” தலைவர்களின் அடுத்த கூட்டம் டெல்லியில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை (டிச.10) தெரிவித்தார்.
இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “2024 தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாரதிய ஜனதாவை (பாஜக) எதிர்கொள்ளும் திட்டத்தை தலைவர்கள் விவாதித்து இறுதி செய்யக்கூடிய கூட்டம் டிச.19ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் காங்கிரஸிற்கு எதிராக உள்ளன.
இதற்கிடையில், டிசம்பர் 6-ம் தேதி இந்தியா கூட்டணி கூட்டத்தை கூட்டியிருப்பதாக அக்கட்சி தெரிவித்தது. இந்தச் சந்திப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லாததால், கூட்டணியின் பல தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில், டெல்லி கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மு.க. ஸ்டாலின் காலை டெல்லி செல்கிறார் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“