/tamil-ie/media/media_files/uploads/2018/05/stalin-meet-dhayalu-ammal-horz.jpg)
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் அன்னையர் தினத்தன்று திமுக மு.க.ஸ்டாலின் தனது தாயைச் சந்தித்து வாழ்த்துக் கூறிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஒரு மனிதனுக்கு ஆதியும் அந்தமுமாய் விலங்குவது தாய். தாயின் நிகரில்லாத பாசத்தையும் பெருமையையும் போற்றும் வகையில் உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். இத்தகைய நன்னாளில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தாயைச் சந்தித்து வாழ்த்து கூறினார்.
சென்னை கோபாலப்புரத்தில் உள்ள இல்லத்தில், தாய் தயாளு அம்மாளை சந்தித்து புத்தாடையுடன் வாழ்த்துக் கூறினார் ஸ்டாலின். மிளிரும் ரோஜா நிறம் பட்டு புடவையை தனது அன்னைக்கு பரிசாக அளித்து வாழ்த்துக் கூறி ஆசிர் பெற்றார். அப்போது மகிழ்ச்சியில் உரைந்த தாய் தயாளு அம்மாள், தனது மகன் ஸ்டாலினுக்கு முத்தமிட்டுக் கொஞ்சிய அழகிய தருணம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது. இதனை மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
,
அன்னையர் தினத்தையொட்டி கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தேன். இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி போற்றி மகிழ்ந்திடுவோம்! #MothersDaypic.twitter.com/K5NOeohIjD
— M.K.Stalin (@mkstalin) May 13, 2018
இன்று இந்தக் காலை சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைராலானது. இதனை அவரது தொண்டர்கள் மற்றும் மக்கள் பார்த்து ரசிப்பது மட்டுமல்லாமல் பகிர்ந்தும் வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.