வெறும் 14% பாலை மட்டுமே கொள்முதல் செய்யும் ஆவினை மேம்படுத்த ஸ்டாலின் செய்தது என்ன? அண்ணாமலை கேள்வி

வெறும் 14% பாலை மட்டுமே கொள்முதல் செய்யும் ஆவினை மேம்படுத்த ஸ்டாலின் செய்தது என்ன என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

வெறும் 14% பாலை மட்டுமே கொள்முதல் செய்யும் ஆவினை மேம்படுத்த ஸ்டாலின் செய்தது என்ன என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Stalins letter to Home Minister Amit Shah regarding Aavins issue

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால், அமுல் இடையே சர்ச்சை எழுந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆவின், அமுல் இடையே பிரச்னை எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் கு. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தினசரி பால் கொள்முதலை அதிகரித்து, பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதிலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

தொடர்ந்து, “தி.மு.க ஆட்சியின் தொடர் தோல்விகளை மறைக்க, நாளொரு நாடகம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2 ஆண்டு காலமாக, திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு நிறுவனங்களைப் புறக்கணித்து வருகிறார்.

தற்போது ஆரம்பித்திருக்கும் புதிய நாடகம் தமிழகத்தில் அமுல் நிறுவனம் வருவதை தடுக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுத்துப்பட்ட கடிதமும் ஆவின் நிறுவனம் மீதான போலி அக்கறையும்.

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகள் வழங்க, முதலில் தனியார் நிறுவனத்திடம் இருந்து இனிப்புப் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டிருந்த திமுகவின் இரட்டை வேடத்தை, தமிழக பாஜக முற்றிலும் அம்பலப்படுத்தியது.
இதனால், வேறு வழியின்றி, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஆவின் நிறுவனத்திடம் இருந்தே இனிப்புக்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாரா?

Advertisment
Advertisements

தமிழ்நாட்டில் தினமும் 244 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வது தினமும் 35 லட்சம் லிட்டர் மட்டுமே.
அதாவது, மாநிலத்தின் மொத்த பால் உற்பத்தியில், வெறும் 14% மட்டுமே, அரசு நிறுவனமான ஆவின் கொள்முதல் செய்கிறது. மேலும், 2021 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு சராசரி பால் கொள்முதல் 32 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதாகப் புகார்கள் உள்ளன.

அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் சிறிதளவும் ஈடுபடாமல், திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின், மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aavin Mk Stalin Amul Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: