Advertisment

தலித் முக்கியத்துவம் அதிகரிப்பு; மொத்தம் 4 அமைச்சர்கள்: கோவி. செழியனுக்கு பவர்ஃபுல் இலாகா

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் முழுப் பொறுப்பும் பாலாஜிக்கு வழங்கப்படும் என்று கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Udhayanithi Stalin Deputy

தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 அமைச்சர்கள் நீக்கம், 6 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் ஆகியவற்றுடன் முக்கிய நிகழ்வாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45 வயதில் துணை முதல்வர் பதவியில் அமர இருக்கிறார். அவருக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Advertisment

Read In English: Stalin son Udhayanidhi appointed deputy CM of Tamil Nadu amid cabinet reshuffle

தமிழக அரசியலில், கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தி.மு.கவில், முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வான முதல்வர் ஸ்டாலினின், மகன் உதயநிதி ஸ்டாலின், 2022-ம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையி்ல், 2024-ம் ஆண்டு துணை முதல்ராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில், நேற்று (செப்டம்பர் 28) அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுனருக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.

இது குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்டிருந்த அறிவிப்பில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தலித் சட்டமன்ற உறுப்பினராக கோ.வி.செழியன், உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் கட்சி மற்றும் ஆட்சியில்,உதயநிதியின் செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ராஜ்பவனில் பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது.

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வான உதயநிதி, அடுத்து 2022-ம் ஆண்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து அரசாங்கத்திற்குள் "பெரிய அங்கீகாரம்" பெறவும், முதல்வரின் நிர்வாகச் சுமையை ஓரளவு குறைக்கவும், உதயநிதியே பதவி உயர்வு கோரியதாக கடந்த ஜூலை 18 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.

இதனையடுத்து கடந்த வாரம் ஆகஸ்ட் மாதம் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட இந்த பதவி உயர்வு, பல்வேறு காரணங்களால் தாமதமானது. அதன்பிறகு திமுக தனது 75வது ஆண்டு வைர விழாவை சென்னையில் கொண்டாடிய சில நாட்களுக்குப் பிறகு, முறையான அறிவிப்பை வெளியிடுவதற்கான நேரம் கனிந்துவிட்டதாக திமுக தலைமை உணர்ந்துள்ளது. அதன்படி தற்போது அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வேலை மோசடி மற்றும் பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் (ED) கைது செய்யப்பட்டு 15 மாதங்கள் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டு நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அவர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுவது கட்சிக்குள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. 
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் முழுப் பொறுப்பும் பாலாஜிக்கு வழங்கப்படும் என்று கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேபோல், உயர்கல்வித்துறை அமைச்சராக டாக்டர் கோ வி செழியன் சேர்க்கப்பட்டிருப்பது அமைச்சரவை மாற்றத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் இப்போது மொத்தம் நான்கு தலித் அமைச்சர்கள் உள்ளனர். இது திமுக தலைமையிலான நிர்வாகத்தில் பரந்த பிரதிநிதித்துவத்தை நோக்கத்தின் ஒரு படியாகும்.

அவரது அமைச்சரவையில் நுழைவது, ஆளும் கட்சி தனது அடித்தளத்தை பலப்படுத்த முற்படுகிறது மற்றும் வரவிருக்கும் தேர்தல்களை நோக்கி அனைவரையும் உள்ளடக்கிய தலைமையை முன்வைக்கிறது. ஆனாலும் கூட, இந்த மறுசீரமைப்பு சாத்தியமான உள்கட்சி பாதகத்தையும் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. உதயநிதியின் பதவி உயர்வு கட்சி மற்றும் அமைச்சரவையில் உள்ள அதிகார சமநிலையை பாதிக்கலாம் என்ற கவலை இருந்தது. ஆனால் "பலம் வாய்ந்த அமைச்சர்கள் தொந்தரவு செய்யாத வரை எந்த பிரச்சனையும் இருக்காது" என்று ஜூலை மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஒரு கட்சியின் மூத்த தலைவர் கூறினார்.

முக்கிய அமைச்சர்கள் தங்கள் இலாகாக்களை தக்க வைத்துக் கொண்டால், உதயநிதியின் எழுச்சிக்கு எதிர்ப்பை சந்திக்க முடியாது என்பது கட்சித் தலைமைக்குள் ஒருமித்த கருத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் அரசியல் நடவடிக்கைகளில் உதயநிதியின் துணை முதல்வர் பதவியும் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, சாதி அமைப்பை நிலைநிறுத்துவதுடன், சமூக நீதிக்கான யோசனையை எதிர்ப்பதால், அதை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறியிருந்தார்.

அவரது வார்த்தைகள் இந்துக்களின் இனப்படுகொலைக்கான அழைப்பு என்று குற்றம் சாட்டி, பா.ஜ.க சார்பில் பல இடங்களில் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. ஜூன் மாதம், உச்ச நீதிமன்றம் உதயநிதியை விமர்சித்தது, ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட அதே தண்டனையை அவர் கோர முடியாது என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment