/tamil-ie/media/media_files/uploads/2020/07/Stanley-Medical-College-Doctor-suicide.jpg)
ஸ்டான்லி மருத்துவமனையில் இளம் மருத்துவர் தற்கொலை
இளம் மருத்துவர் ஒருவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு மூலம் அவதூறு : போலீசில் ஆர்.எஸ்.பாரதி புகார்
முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ படிப்பு படித்து வந்தவர் மாணவர் கண்ணன். இவருக்கு வயது 25.
பணிச்சுமை காரணமாக கண்ணன் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என மருத்துவத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. நேற்று இரவு வரையிலும் கொரோனா வார்டு பணியைக் கவனித்திருக்கிறார்.தற்கொலை குறித்து ஏழு கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து, “தற்கொலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். பணிச்சுமையை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்களை கவனிக்க வேண்டும்” என மருத்துவர் ரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாதம் ரூ.1 வாடகையில் மனைவியின் தொண்டு அமைப்புக்கு இடம் – சர்ச்சையில் ஐ.டி.எஃப்.சி வங்கி எம்.டி
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 ஆகிய எண்களுக்கு அழைக்கவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us