சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படிக்கும் 3ம் ஆண்டு மருத்துவ மாணவர் தற்கொலை செய்துள்ளார்.
சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் முன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பை ரஞ்சித் பால் என்ற மாணவர் படித்து வருகிறார். இவர் கேரளாவில் உள்ள எர்னாகுளத்தை சேர்ந்தவர். இந்நிலையில் அவர் நேற்று ஹாஸ்டல் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் விடுதியில் உள்ள மாணவர்கள் வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
விடுதியின் வார்டன், ஏழு கிணறு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அறையின் கதவை உடைத்தனர். அப்போது ரஞ்சித் மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் முன்பே இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகளை பயன்படுத்தி உள்ளார். இந்த மருந்துகள் அவரை 3 நிமிடங்களில் மரணிக்கச் செய்துள்ளது என்று ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர், பி. பாலாஜி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“