scorecardresearch

சும்மா டயல் பண்ணுங்க… கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ: தொடங்கி வைத்த தமிழிசை

புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புதுச்சேரி கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

Puducherry Free Auto
கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ சேவை – புதுச்சேரி

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

புதுச்சேரியில் கர்ப்பிணி பெண்களுக்கான இலவச ஆட்டோ சேவையை துனை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்* 8344868788 இந்த தொலைபேசியில் அழைத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ வந்து நிற்கும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார் .

புதுச்சேரியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புதுச்சேரி கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான இலவச ஆட்டோ சேவையை இன்று மாலை தொடங்கியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரே இன்று மாலை நடைபெற்றது .

இதில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆட்டோவை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் மற்றும் கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை நிறுவனர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் யார் வேண்டுமானாலும் புதுச்சேரியில் உள்ள ஆட்டோவை தொடர்பு கொண்டால் இலவசமாக பயணம் செய்யலாம் அதற்கான கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கேரிங் ஆர்ம்ஸ் அறக்கட்டளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Started free auto service for pregnant ladies in puducherry

Best of Express