scorecardresearch

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் முதலிடம் பிடித்து தமிழ்நாடு சாதனை

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு பிடித்துள்ளது.

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் முதலிடம் பிடித்து தமிழ்நாடு சாதனை

state food safety list; tamilnadu tops the list , இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய  ஆணையத்தின்  மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு  பிடித்துள்ளது.

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிப்பதற்கான உணவு பாதுகாப்பு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு தினமாக நேற்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய  ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை  மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 2 வது இடத்தை குஜராத்தும், 3 வது இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளது. சிறிய மாநிலங்கள் தரவரிசையில் கோவா முதல் இடத்தையும், மணிப்பூர் 2 வது இடத்தையும், சிக்கிம் 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: State food safety list tamilnadu tops the list