குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை - ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
குமரி அனந்தன் ஸ்டாலின்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார் இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

" காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து வேதனையும், வருத்தமும் அடைந்தேன். மறைந்த குமரி அனந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய குமரி அனந்தன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சாrபில் "தகைசால் தமிழர்' கடந்த ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டதும்

Advertisment
Advertisements

தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட அய்யா குமரி அனந்தன் அவர்களின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

GoEO19qXoAA-SdY

Stalin Kumari Ananthan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: