Advertisment

போஸ்டர் ஒட்டிய கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய போலீஸ்; ரூ.6 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம்

தோழா திரைப்பட போஸ்டரை ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரைத் தாக்கிய தூத்துக்குடி போலீசார் 3 பேருக்கு தலா ரூ2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
karthi thoza movie, State human rights commission, fine to three police, 6 laksh compensation to karthi fans, police attack on karthi fans, karthi fans refuse to give bribe, தூத்துக்குடி, நடிகர் கார்த்தி, தோழா திரைப்படம், போஸ்டர், போலீஸார் தாக்குதல், மனித உரிமை ஆணையம், 6 லட்சம் இழப்பீடு, Tuticorin, Actor Karthi, Movie poster, Police Attack, Human Rights Commission

தோழா திரைப்பட போஸ்டரை ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரைத் தாக்கிய தூத்துக்குடி போலீசார் 3 பேருக்கு தலா ரூ2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நடிகர் கார்த்தி தெலுங்கு சினிமா நடிகர் நாகர்ஜுனா இணைந்து நடித்த தோழா திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. அப்போது, தூத்துக்குடியில் கார்த்தியின் ரசிகர் மன்றத்தினர் தோழா திரைப்படத்தின் போஸ்டர்களை ஓட்டியபோது, அந்த வழியே வந்த தூத்துக்குடி போலீசார் அவர்களிடம் போஸ்டர் ஒட்ட லஞ்சம் கேட்டனர். அவர்கள் லஞ்சம் தர மறுத்ததால் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில்தான், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாக்குதல் நடத்திய போலீசாருக்கு தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு தோழா திரைப்படத்தின் போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர்கள் மன்றத்தினர் மீது போலிசார் நடத்திய தாக்குதல் குறித்து, தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவாஸ்கர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த தோழா படம் வெளியானது. அப்போது, எனது சகோதரர்கள் வெங்கடேஷ் (தூத்துக்குடி மாவட்ட கார்த்தி ரசிகர் மன்ற தலைவர்), வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகியோர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகளில் போஸ்டர் ஒட்டினர்.

அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலிசார் திரவிய ரத்தினராஜ் லஞ்சம் கேட்டுள்ளார். போஸ்டர் ஒட்டியவர்கள் லஞ்சம் கொடுக்க மறுத்ததால், அவர்களை பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, அங்கே தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், மத்திய பாகம் காவல் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் எனது சகோதரரர்களின் ஆடைகளை களைந்து ஆபாசமாக திட்டி கடுமையாக தாக்கினர்.

போலீசார் தாக்கியதில் அவர்கள் காயம் அடைந்தனர். எனவே, எனது சகோதரர்கள் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், புகார் குறித்த சாட்சியம் மற்றும் ஆவணங்களை பார்க்கும்போது ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்ட வெங்கடகொடிக்கு ரூ.5 லட்சமும், வெங்கடேஷ் மற்றும் சீனிவாஸ் ஆகியோருக்கு தலா ரூ. 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ ரவிக்குமார், காவலர் திரவிய ரத்தினராஜ் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலித்துக்கொள்ளலாம். மேலும், தாக்குதல் நடத்திய 3 போலீசார் மீதும் குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Karthi Human Rights
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment