மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கங்களை அள்ளிய பெண் காவலர்கள்
நெய்வேலி தலைமை காவலர் ராஜேஸ்வரி மற்றும் ஆயுதப்படை பெண் காவலர் செல்வி நதியா மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடத்தை பெற்று பிடித்து சாதனை படைத்தனர்.
நெய்வேலி தலைமை காவலர் ராஜேஸ்வரி மற்றும் ஆயுதப்படை பெண் காவலர் செல்வி நதியா மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடத்தை பெற்று பிடித்து சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி குண்டு சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. நெய்வேலி நகர காவல் நிலையம் பெண் தலைமை காவலர் ராஜேஸ்வரி மற்றும் ஆயுதப்படை பெண் காவலர் செல்வி நதியா ஆகியோர் இன்சாஸ் ரைபிள் துப்பாக்கி சுடும் பெண்கள் பிரிவில் பங்கேற்று ஒட்டுமொத்த கேடயம் முதலிடத்தை வென்றார்கள்.
கடந்த 16ம் தேதி மதுரையில் நடந்த 48 வது மாநில அளவிலான சிவில் துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண் தலைமை காவலர் ஆர். ராஜேஸ்வரி பங்கேற்று ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்று தென்னிந்திய அளவிலான துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் தேர்வாகினார். பதக்கம் பெற்ற பெண் காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆயுதப்படை ஆய்வாளர் அருட்செல்வன் உடனிருந்தார்.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil