டிடிவி தினகரன், புகழேந்தி ஆகியோரை தேசதுரோக வழக்கில் அக்டோபர் 24-ம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
மத்திய மாநில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் மீது சேலம் அன்னதானபட்டி காவல்துறையினர் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தன் மீது பழி வாங்கும் நோக்கத்துடன் காவல்துறையினர் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றதாலேயே தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக புகழேந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் அந்த துண்டு பிரசுரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட பலரின் படங்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றது தனக்கு தெரியாது எனவும், அதை யார் அச்சிட்டார்கள் என்ற விவரமும் தெரியாது என மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ் வரும் இருபத்தி நான்காம் தேதி வரை இந்த புகார் தொடர்பாக புகழேந்தி உள்ளிட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தி இந்த மனுதொடர்பாக காவல்துறை விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Stay to arrest ttv dhinakaran and pugalenthi chennai high court
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்