துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பார்த்திபன். இவரது முதல் தாரத்திற்கு பிறந்த மகள் ராகவி. ராகவியின் தாயார் இரண்டு வருடத்திற்கு முன் மரணம் அடைந்துவிட்டார். இதனால், பார்த்திபன் சூரியகலா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போதே ராகவியை நன்கு பார்த்துக் கொள்வேன் என்ற வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறார்.
Advertisment
சென்னை தாம்பரத்தை அடுத்த ஹஸ்தினாபுரத்தில் பிளாட்டில் பார்த்திபன், சூர்யகலா குடும்பம் வாழ்ந்து வந்திருக்கிறது. இவர்களுக்கு, ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், சூர்யகலா மீண்டும் கர்ப்பமாக, கணவர் பார்த்திபன் கருவைக் கலைத்து விடுமாறு கூறியதாக தெரிகிறது. இரு குழந்தைகள் போதும், மூன்றாவது குழந்தை வேண்டாம் என அவர் சூர்யகலாவிடம் கூறியிருக்கிறார். இதனால், தம்பதியிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
ஒருக்கட்டத்தில், கணவர் மீதிருந்த கோபம், ராகவி மீது திரும்ப, நேற்று தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சிறுமியை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ராகவியை கழுத்தை நெரித்த சூர்யகலா, அங்கிருந்து முட்புதரில் வீசியிருக்கிறார்.
Advertisment
Advertisements
இவற்றையெல்லாம் செய்து முடித்துவிட்டு, கணவருக்கு போன் செய்து ராகவியை காணவில்லை என்று கதறியிருக்கிறார். பதறியடித்து வந்த பார்த்திபன், கீழே விழுந்த கிடைந்த மகளை பார்த்து கதறி அழுது, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள், ராகவி இறந்துவிட்டதாக கூறினார்.
முதலில், ராகவி மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக சூர்யகலா அனைவரும் நம்ப வைத்திருக்கிறார். ஆனால், பின்னர் போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், ராகவியை திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சூர்யகலா, உண்மையை வாக்குமூலமாக அளித்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சூர்யகலாவை சிறையில் அடைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.