/tamil-ie/media/media_files/uploads/2023/06/Express-Image-2-2.jpg)
Source: Twitter/ @KN_NEHRU
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று, அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் இயக்குநர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023… pic.twitter.com/c1BlaqEbBA
— K.N.NEHRU (@KN_NEHRU) June 22, 2023
இந்நிகழ்ச்சியைப்பற்றி டுவிட்டர் அமைச்சர் கே.என்.நேரு பதிவிட்டுள்ளதாவது, "மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று, அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் இயக்குநர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான பயிலரங்கத்தை தொடங்கிவைத்து, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்ட விதிகள் தொகுப்பினையும் பயிற்சி பெறும் அலுவலர்களிடம் வழங்கினேன்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா இ.ஆ.ப., நகராட்சி நிருவாக இயக்குநர் பொன்னையா இ.ஆ.ப. மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்", என்று பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியதாவது, "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 10 ஆயிரம் பொறியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.