/tamil-ie/media/media_files/uploads/2018/05/ieTamil-23-may-01.jpg)
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் லண்டன் வரையிலும் வெடிக்க தொடங்கியுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வந்தன. இந்த போராட்டத்தின் 100 ஆவது நாள் அன்று கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் லண்டனில் இருக்கும் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை உள்ளிட்ட வேதாந்தா குழும நிறுவனங்களின் தலைவரான அனில் அகர்வால் வசிக்க்கும் வீடு லண்டனில் உள்ளது. இந்த வீட்டை முற்றுகையிட்ட லண்டன் வாழ் தமிழர்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராகவுய்ம், ஆலையை மூடக்கோரியும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், வரும் விடுமுறை தினத்தன்று அங்கு வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி ஆலை உரிமையாளர் அகர்வால் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதே சமயத்தில் அகர்வாலின் மகனை தமிழர்கள் 3 பேர் கடுமையாக தாக்கியுள்ளதாகவும், அவர்கள் மூன்று பேரை லண்டன் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.