sterlite oxygen supply : கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருவதுடன் மருத்துவ உள்கட்டமைப்பில் பெரும் பாதிப்பையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் நிலவுவதால் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதியை உச்ச நீதிமன்றத்தில் பெற்றது வேதாந்தா குழுமம். அதன் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது.
எப்போது இங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவ பயன்பாட்டிற்உ வரும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இன்று இரவு அல்லது நாளாஇ காலை தன்னுடைய முதல் ஆக்ஸிஜன் விநியோகத்தை அந்த நிறுவனம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் அதன் உற்பத்தி அளவு குறைவாக இருந்தாலும் 10 முதல் 15 நாட்களில் தன்னுடைய முழு கொள்ளளவான 1050 டன் ஆக்ஸிஜன் உற்பத்தியை அந்நிறுவனம் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் இங்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு துரிதகதியில் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வரும் மே 15 முதல் 40மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil