ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு: தருண் அகர்வால் குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை!

நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது ன்று ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்க செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆலைக்கு சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுதாக்கல் செய்ததையடுத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

ஆலையை ஆய்வு செய்ய மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை 48 கவர்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.

நீதிபதி தருண் அகர்வால் குழு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் வழக்கு இன்று (28.11.18) விசாரணைக்கு வந்தது. இதில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்று ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கையை சமர்பித்துள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது, முறையாக நோட்டீஸ் அனுப்பிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயம் அடுத்தக்கட்ட விசாரணைக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close