Advertisment

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவுக்கு பின்னடைவு: அண்ணாமலை

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

author-image
WebDesk
Jun 01, 2023 19:57 IST
New Update
SV Shekhar Annamalai War of Words

எஸ்வி சேகர் அண்ணாமலை வார்த்தைப் போர் தொடர்கிறது.

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் இந்தியாவிற்கு பெரிய பின்னடைவு என்பது பிற்காலத்தில் தெரியவரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisment

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்:

"தமிழக முதல்வர் வெளிநாடு செல்வது வரவேற்கத்தக்கது. கடந்த முறை துபாய் சென்று வந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை வைத்தோம்.

ஆனால் இதுவரை திமுக அரசு வெளியிடவில்லை. வெளிநாட்டு முதலீடுகள் குறித்து மாநாடு நடந்த பிறகு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் உரிமைகளில் முதல்வர் தொடர்ச்சியாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் அமைச்சர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வருங்காலத்தில் இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய பாதிப்பு என்று தெரிய வரும்.

காப்பருக்காக நாம் சீனாவிடம் கைகட்டி கொண்டு நிற்கிறோம். தொலைநோக்கு பார்வை இந்த அரசிற்கு இருப்பதாக தெரியவில்லை” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu #Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment