தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக கோவையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக இந்திய மாணவர் சங்கம் புகார் அளித்துள்ளது.
கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவை சேர்ந்த மாணவர் சேர்க்கை முடித்த பின்னரே சுயநிதி பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும்.
ஆனால் இக்கல்லூரியில் மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் நன்கொடை வசூல் செய்ய திட்டமிட்டு அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாடப்பிரிவு இரண்டையும் ஒரே நாளில் செய்ய திட்டமிட்டுள்ளது.
இது தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி மாணவ மாணவியர் விடுதியில் சேர்க்கையின் போது ஒரே தவணையாக விடுதி கட்டணம் கட்ட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மாணவ மாணவியர் விடுதி ஒதுக்கீடும் ஒரு தெளிவான வகையில் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய மாணவர் சங்கத்தினர் இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேர்மையாக நடக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“