/indian-express-tamil/media/media_files/2025/05/04/CFmPBBBvJzBivPgOQLCM.jpg)
சுடிதாரில் அதிக பட்டன்கள் - நீட் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி மறுப்பு: கடைசி நேரத்தில் நடந்த நெகிழ்ச்சி!
சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இம்முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வு எழுதினர், சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதினர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பெருமாநல்லூர், என 7 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் 3ஆயிரத்து 212 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நீட் தேர்வினை எழுதினர். 11 மணிக்கு மாணவர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதனால் கலக்கமடைந்த மாணவி செய்வதறியாது தவித்துள்ளார். தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த மாணவி அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார். அப்போது தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் போலீசார் உடனடியாக மாணவியை இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச் சென்று புதிய உடை வாங்கிக் கொடுத்தனர்.
அந்த உடையை அணிந்து கொண்டு மாணவி மீண்டும் தேர்வு மையத்திற்கு வந்தார். பின்னர் சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அந்த மாணவியை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி செய்த பெண் போலீசாரின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
அதேபோல், ஹால்டிக்கெட்டில் மாவட்டம் பெயர் இல்லாததால் தருமபுரிக்கு பதில் சேலத்துக்கு மாணவர்கள் சென்றுள்ளனர். அரசு கல்லூரி, சேலம் பைபாஸ் சாலை என்று மட்டும் ஹால்டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்து, சேலத்துக்கு பகல் 1 மணிக்கு வந்த நிலையில் மீண்டும் தருமபுரி செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் 3 மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர் கடும் வெயிலில் அவதிப்படும் சூழலே பெரும்பாலான மையங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.