தல புடிக்குமா, தளபதி புடிக்குமா? வேலை வழிகாட்டி முகாமில் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய மாணவன்
கோவையில் நடைபெற்ற கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், ஒரு மாணவர் உங்களுக்கு தல புடிக்குமா, தளபதி புடிக்குமா? என்று கேட்டதற்கு பதிலளித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், ஒரு மாணவர் உங்களுக்கு தல புடிக்குமா, தளபதி புடிக்குமா? என்று கேட்டதற்கு பதிலளித்துள்ளார்.
Advertisment
கோவையில் நடைபெற்ற கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் மாணவ மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு தம்முடைய அனுபவங்களை பகிர்ந்தபடி பதிலளித்தார்.
கோவை எக்கனாமிக் சேம்பர் சார்பாக நான் முதல்வன் எனும் திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டிற்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி,கோவையில் நடைபெற்றது.
இதில் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் எதிர் கால துறையை தேர்வு செய்வது எப்படி,மற்றும் போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள தங்களை தயார் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாணவ,மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு தம்முடைய அனுபவங்களை பகிர்ந்தபடி பதிலளித்து பேசினார்.
தாங்கள் படிக்கும் காலங்களில் தற்போது உள்ளது போல் டெக்னாலஜி வசதிகள் அப்போது இல்லை ஆனால் இப்போதுள்ள மாணவர்கள் அத்தகைய விஷயங்களை பயனுள்ளதாக மாற்ற முயற்சி மேற்கொள்ளுங்கள் எனவும் அதில் ஒரு மாணவன் தங்களுக்கு தல பிடிக்குமா தளபதி பிடிக்குமா என்ற கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர் தமக்கு தலயையும் பிடிக்கும் தளபதியையும் பிடிக்கும் என்று கூறியதை மாணவ மாணவிகள் ககைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"